லக்ஷ்மன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி தனது 25வது படத்தில் நடிக்கிறார். இதையடுத்து அகமத் இயக்கத்தில் தனது 26வது படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தில், நடிகை டாப்ஸி மற்றும் ஈரானிய நடிகை எல்நாஸ் நொரோஷியும் நடிக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்திற்கான இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.