Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ஜீ.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் ‘கள்வன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

January 8, 2023
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
ஜீ.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் ‘கள்வன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

ஜீ.வி. பிரகாஷ் குமார், பாரதிராஜா இணைந்து நடித்திருக்கும் ‘கள்வன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகர் தனுஷ் தன் இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

‘முண்டாசுப்பட்டி’, ‘மரகத நாணயம்’, ‘ராட்சசன்’ ஆகிய படங்களின் ஒளிப்பதிவாளர் பி.வி. சங்கர் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கள்வன்’. இதில் ஜீ.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘லவ் டுடே’ புகழ் நடிகை இவானா நடித்திருக்கிறார். இவர்களுடன் பாரதிராஜா, நடிகர் சாய் தீனா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இயக்குநரான பி.வி. சங்கர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்துக்கு கதாநாயகனான ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.

காடும், காடு சார்ந்த மக்களின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை ஆக்ஸிஸ் ஃபிலிம் ஃபெக்டரி பட நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபு தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் அதற்கான மோஷன் போஸ்டர் ஆகியவை வெளியிடப்பட்டிருக்கிறது.

அவற்றில் அடர்ந்த வனப்பகுதியில் களவாடுவதை தொழிலாக கொண்டிருக்கும் ஒரு குடும்பம், அதற்கு பாதுகாவலாக இருக்கும் யானைக் கூட்டத்தைப் பற்றிய காட்சிகளும் இடம்பெற்றிருப்பதால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

இந்தப் படம் இவ்வருடம் கோடைகால விடுமுறையில் வெளியாகும் என தெரிவிக்கப்படுகிறது.

Previous Post

நியூஸிலாந்துடனான டெஸ்டில் 319 ஓட்டங்கள் வெற்றி இலக்கு | இக்கட்டான நிலையில் பாகிஸ்தான்

Next Post

வடக்கில் வீதி விபத்துக்களை தடுக்க வேண்டும் | ஆறுதிருமுருகன் வேண்டுகோள்

Next Post
மருந்துகளுக்கு தட்டுப்பாடு ; உதவ முன்வாருங்கள் –  ஆறுதிருமுருகன் கோரிக்கை

வடக்கில் வீதி விபத்துக்களை தடுக்க வேண்டும் | ஆறுதிருமுருகன் வேண்டுகோள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்…! வெடித்த ஆர்ப்பாட்டம் – வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்…! வெடித்த ஆர்ப்பாட்டம் – வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

June 30, 2026
ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

June 30, 2026
கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures