Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

சேரனின் கனவை நிஜமாக்கிய ‘ஆனந்தம் விளையாடும் வீடு’

December 8, 2021
in Cinema, News
0
சேரனின் கனவை நிஜமாக்கிய ‘ஆனந்தம் விளையாடும் வீடு’

இசையமைப்பாளர் சித்து குமாரின் இனிமையான கிராமிய இசையில் உருவாகி, இயக்குநரும், நடிகருமான சேரன் நடிப்பில் தயாரான ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தின் ஓடியோ வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

ஸ்ரீவாரி பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. ரங்கநாதன் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’. இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த படத்தில் ‘யதார்த்த நாயகன்’ சேரன், ‘இளைய நவரச நாயகன்’ கௌதம் கார்த்திக், சரவணன், தம்பிராமையா, விக்னேஷ், சிவாத்மிகா ராஜசேகர், வெண்பா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கிறார்கள். பால பரணி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு சித்து குமார் இசை அமைத்திருக்கிறார்.

இப்படத்தின் ஓடியோ வெளியீட்டு விழாவில் பங்குபற்றி, படக்குழுவினரை வாழ்த்தி இயக்குநர் லிங்குசாமி பேசுகையில், ” நான் இயக்கிய முதல் படத்தின் டைட்டில் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ என்று தான் வைத்திருந்தேன். அப்போது சிலர் இந்த டைட்டில் ஏற்கனவே தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதனால் வேறு ஏதேனும் தலைப்பை வைக்கலாம் என ஆலோசனை கூறினர். இதனை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக நான் தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்று விசாரித்தபோது, இந்த தலைப்பை இயக்குநர் சேரன் பதிவு செய்து வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. ‘தேசிய கீதம்’  படத்தின் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இயக்குநர் சேரனை நேரில் சந்தித்து, ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ பட தலைப்பு குறித்து பேசினேன். அப்போது அவர், ‘இந்த தலைப்பு நான் நடிப்பதற்காக வைத்திருக்கிறேன்’ என்று உறுதிபட தெரிவித்து விட்டார்.

அதன் பிறகு என்னுடைய அலுவலகத்தில் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ என்ற எழுதியிருந்த தாளின் மீது ‘ஆனந்தம்’ என்ற சொல் மட்டும் தெரியும் வகையில் அதன் மீது கிளாப் போர்டு இருந்தது. உடனடியாக என் மனதில் ‘ஆர்.பி. சவுத்ரியின் ஆனந்தம்’ இதுதான் தலைப்பு என தீர்மானித்துக் கொண்டு, தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி அவர்களிடம் தெரிவித்தேன். அவரும் இதற்கு உடனடியாக ஒப்புதல் கொடுத்தார். இப்படித்தான் ஆனந்தம் படத்தின் தலைப்பு கிடைத்தது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தின் டைட்டிலை  வைத்திருந்த சேரன், தற்போது அதே பெயரில் கதாநாயகர்களில் ஒருவராக நடித்திருப்பதை நான் இப்படத்தின் வெற்றியாக காண்கிறேன்.” என்றார்.

‘ஆனந்தம் விளையாடும் வீடு’ என்ற படத்தின் டைட்டிலை 2000 ஆண்டில் பதிவு செய்த இயக்குநர் சேரன், இருபது ஆண்டுகளுக்குப் பிறகு அதே டைட்டிலில் நடித்திருப்பதால் அவருடைய கனவு நனவாகி இருக்கிறது. இதன் காரணமாகவே இந்த திரைப்படம் பாரிய வெற்றியை பெறும் என்று திரையுலகினர் தெரிவிக்கிறார்கள்.

#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

பன்மடங்கு தொற்றாளர்கள் சமூகத்தில் உள்ளனர் | சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

Next Post

வீட்டு வாசலில் விழுந்த 2 உடல்கள்.. பதறி போன காட்டேரி மக்கள்.. என்ன நடந்தது குன்னூரில்?

Next Post
வீட்டு வாசலில் விழுந்த 2 உடல்கள்.. பதறி போன காட்டேரி மக்கள்.. என்ன நடந்தது குன்னூரில்?

வீட்டு வாசலில் விழுந்த 2 உடல்கள்.. பதறி போன காட்டேரி மக்கள்.. என்ன நடந்தது குன்னூரில்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

டார்க் – திரைப்பட விமர்சனம்

டார்க் – திரைப்பட விமர்சனம்

July 4, 2026
தனியார் பஸ் சேவைகள் 50 சதவீதத்தால் குறைவடையும்

புதிய பேருந்து கட்டண திருத்தம் வெளியீடு: ஆரம்பக் கட்டணம் 34 ரூபாவாக நிர்ணயம்!

July 4, 2026
குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

July 3, 2026
முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு

கொக்குத்தொடுவாய் அத்துமீறிய உப்பள நிர்மாணம் : தற்போதைய நிலை குறித்து விளக்கம் கோரி ரவிகரன் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளருக்குக் கடிதம்!

July 3, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures