Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

செரெண்டிப் , கிறிஸ்டல் பெலஸ் ஆகிய கழகங்களுக்கு இடையிலான போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவு

August 31, 2022
in News, Sports
0
செரெண்டிப் , கிறிஸ்டல் பெலஸ் ஆகிய கழகங்களுக்கு இடையிலான போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவு

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் நடத்திவரும் சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட சுற்றின் 11ஆம் கட்டத்தின் இரண்டாம் நாள் போட்டிகளில் சோண்டர்ஸ், மொரகஸ்முல்ல ஆகிய கழகங்கள் இறுக்கமான வெற்றிகளை ஈட்டியதுடன் செரெண்டிப் மற்றும் கிறிஸ்டல் பெலஸ் ஆகிய கழகங்களுக்கு இடையிலான போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற சம்பியன்ஸ் லீக் போட்டி ஒன்றில் சோண்டர்ஸ் கழகத்திடம் 2 – 3 என்ற கோல்கள் வித்தியாசத்தில் பொலிஸ் கழகம் தோல்வி அடைந்தது.

இந்த வருட சம்பியன்ஸ் லீக் சுற்றுப் போட்டியில் மிக மோசமாக விளையாடி வரும் பொலிஸ் கழகம் அடைந்த 8ஆவது தோல்வி இதுவாகும்.

இப் போட்டியில் மிகத் திறமையாக விளையாடிய பொலிஸ் கழகம் 13ஆவது நிமிடத்தில் பத்திரண இரட்டைச் சகோதரர்களில் ஒருவரான தமித் போட்ட கோல் மூலம் முன்னிலை அடைந்தது.

எனினும் 24ஆவது நிமிடத்தில் சுந்தரராஜ் நிரேஷும் 41ஆவது நிமிடத்தில் அணித் தலைவர் இந்தீவர உதாரவும் கோல்கள் போட்டு சோண்டர்ஸ் கழகத்தை முன்னிலையில் இட்டனர்.

இடைவேளையின் பின்னர் 77ஆவது நிமிடத்தில் மாற்றுவீரர் மதுக்க சிறிவர்தன கோல் ஒன்றைப் போட்டு பொலிஸ் கழகத்துக்கு உற்சாகத்தைக் கொடுத்தார்.

எனினும் 84ஆவது நிமிடத்தில் டிலான் டி சில்வா போட்ட கோல் 3 – 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் சோண்டர்ஸ் கழகத்தை வெற்றி அடையச் செய்தது.

மொரகஸ்முல்ல கழகத்திற்கு இறுக்கமான வெற்றி

காலி விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சம்பியன்ஸ் லீக் போட்டியில் நிகம்போ யூத் கழகத்தை 2 – 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் மொரகஸ்முல்லை கழகம் வெற்றிகொண்டது.

ஆனால், இந்த வெற்றி மொரகஸ்முல்ல கழகத்திற்கு இலகுவாக வரவில்லை.

போட்டியின் 43ஆவது நிமிடத்தில் நிகம்போ யூத் அணித் தலைவர் நிலூக்க ஜனித் கோல் போட்டு தனது அணியை முன்னிலையில் இட்டார்.

இடைவேளையின் பின்னர் மிகத் திறமையாக விளையாடிய மொரகஸ்முல்ல கழகம் 2 கோல்களைப் போட்டு  போட்டி முடிவைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு.

50ஆவது நிடமிடத்தில் டிலான் மதுஷன்கவும் 74ஆவது நிமிடத்தில் நிமல தனஞ்சயவும் கோல்கள் போட்டு மொரகஸ்முல்ல கழகத்தின் வெற்றியை உறுதி செய்தனர்.

செரெண்டிப் கழகத்துக்கு ஏமாற்றம்

செரெண்டிப் கழகத்திற்கும் கிறிஸ்டல் பெலஸ் கழகத்திற்கும் இடையில் குருநாகல் மாளிகாபிட்டி மைதானத்தில் நடைபெற்ற சம்பியன்ஸ் லீக் போட்டி 2 – 2 கோல்கள் கணக்கில் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

இந்த வருட சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டியில் முன்னேற்றத்தை வெளிப்படுத்தி வரும் செரெண்டிப் கழகம் இரண்டாம் இடத்திற்கு குறி வைத்து விளையாடி வருகிறது. ஆனால், இந்தப் போட்டி முடிவு அக் கழகத்திற்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

41ஆவது நிமிடத்தில் அணித் தலைவர் அசன்டே இவேன்ஸ் கோல் போட்டு செரெண்டிப் கழகத்தை முன்னிலையில் இட்டார்.

இடைவெளையின் பின்னர் 2 நிமிட இடைவெளியில் ஸக்கீர் அஹ்மத் (52 நி., 54 நி.) 2 கொல்களைப் போட்டு கிறிஸ்டல் பெலஸ் கழகத்தை முன்னிலையில் இட்டார்.

எனினும் செரெண்டிப் கழகம் 65ஆவது நிமிடத்தில் சார்பாக ரியாஸ் மொஹமத் கோல் நிலையை சமப்படுத்தினார்.

அதன் பின்னர் இரண்டு அணிகளாலும் வெற்றி கோலை போட முடியாமல் போனதால் ஆட்டம் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

Previous Post

நடிகர் பிரஜின் நடிக்கும் ‘D3’ டீசர் வெளியீடு

Next Post

ஈராக் போராட்டத்தில் 20 பேர் பலி

Next Post
ஈராக் போராட்டத்தில் 20 பேர் பலி

ஈராக் போராட்டத்தில் 20 பேர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

July 1, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

அவசர கால சட்டம் இனியும் நீடிக்கப்பட மாட்டாது – அரசாங்கம் அறிவிப்பு

July 1, 2026
வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

July 1, 2026
தனியார் பஸ் சேவைகள் 50 சதவீதத்தால் குறைவடையும்

பஸ் கட்டணங்களை 12% இனால் அதிகரிக்க தீர்மானம்

July 1, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures