தோனியின் வாழ்க்கை படத்தில் நடித்த பிரபல ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்(34), மும்பையில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திரையுலகினர், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் பிரதமர் மோடி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில், ”சுஷாந்த் சிங் திறமையான நடிகர். சீக்கிரம் நம்மை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். டிவியில் இருந்து சினிமாவில் அவர் சிறப்பாக செயல்பட்டார். அவரின் வளர்ச்சி பலருக்கு உந்துதலாக இருந்தது. நினைவில் நிற்க கூடிய கதாபாத்திரங்களை அவர் விட்டு சென்றுள்ளார். அவரின் மரணம் அதிர்ச்சி தருகிறது. அவரது குடும்பத்தினர், ரசிகர்களுக்கு ஆறுதல்கள். ஓம் சாந்தி” என பதிவிட்டுள்ளார்.













