சுவிஸ் நாட்டில் மக்கள் தொகையை விட உணவு இறக்குமதி மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசின் சுங்க நிர்வாகம் சார்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி கடந்த 1990-லிருந்து 2016 வரை உணவு பொருட்களின் இறக்குமதி 80 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளதாககவும் இது நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சியை விட மூன்று மடங்கு வேகம் எனவும் தெரிய வந்துள்ளது.
அதாவது ஒரு நபர் உட்கொண்ட இறக்குமதி செய்யப்பட்ட உணவின் அளவானது 344 கிலோ கிராமிலிருந்து 490 ஆக அதிகரித்துள்ளது.
குறிப்பாக பானங்களின் இறக்குமதியே 40 சதவிகிதம் என்ற அளவில் மிகவும் அதிகரித்துள்ளது. அதில் கனிம நீர் மட்டுமே 22 சதவிகிதம் ஆகும். மேலும் கோதுமையை அடிப்படையாகக் கொண்ட உணவு பொருட்களின் இறக்குமதியும் கணிசமான அளவு அதிகரித்துள்ளது.
8 மற்றும் 9 சதவிகிதம் என்ற வகையில் முறையே வேளாண்மை பொருட்கள் பழங்கள் மற்றும் காய்கறி இறக்குமதிகள் அதிகரித்துள்ளதாக சுங்க நிர்வாகம் சார்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது.
மேலும் சுவிஸின் மொத்த இறக்குமதியில் 10.07 பில்லியன் டொலர் மதிப்புள்ள உணவு மற்றும் பானம் சம்மந்தமான பொருட்களின் சதவிகிதம் மட்டும் 6 என்பது குறிப்பிடத்தக்கது.