Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சருமத்திற்கு அழகு சேர்க்கும் குங்குமப்பூ ‘பேஸ் பேக்’

July 10, 2021
in News, மகளீர் பக்கம்
0
குங்குமப்பூ தரும் அழகு நன்மைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். குங்குமப்பூவுடன் ஒருசில வீட்டு உபயோகப்பொருட்களை சேர்த்து ‘பேஸ் பேக்’ தயாரித்து சருமத்திற்கு கூடுதல் பொலிவு சேர்க்கலாம்.   சருமத்திற்கு அழகு சேர்க்கும் குங்குமப்பூ ‘பேஸ் பேக்’குங்குமப்பூ சருமத்திற்கு அழகு சேர்க்கும் தன்மை கொண்டது. சருமத்தை ஈரப்பதமாக்கும், வடுக்களை குணமாக்கும், முகப்பருவை போக்கும், இளமையை தக்கவைக்கும்.. இப்படி குங்குமப்பூ தரும் அழகு நன்மைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். குங்குமப்பூவுடன் ஒருசில வீட்டு உபயோகப்பொருட்களை சேர்த்து ‘பேஸ் பேக்’ தயாரித்து சருமத்திற்கு கூடுதல் பொலிவு சேர்க்கலாம். குங்குமப்பூ-பால்: ஒரு சிட்டிகை குங்குமப்பூவுடன் 4 டேபிள்ஸ்பூன் பால் சேர்த்து இரவு முழுவதும் ஊறவைத்துக்கொள்ள வேண்டும். பின்பு அதனை நன்றாக கிளறிவிட்டு, அதனுள் பஞ்சை முக்கி முகத்தில் தடவிவிட்டு சிறிது நேரம் உலர விடவும். பின்பு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிவிடலாம். அழகு நன்மைகள்: இந்த பேக் சருமத்திற்கு பிரகாசமான நிறத்தை அளிக்கும். குங்குமப்பூ-தேன்: 2-3 குங்குமப்பூ இழைகளுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். பின்பு பிரஸையோ, விரலையோ கொண்டு முக்கி முகத்தில் தடவ வேண்டும். 10 முதல் 15 நிமிடங்கள் வரை உலரவிட்டுவிட்டு பின்பு குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். அழகு நன்மைகள்: தேன் ஈரப்பதமாகவும், ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்ததாகவும் இருப்பதால், முகப்பருவை அகற்றவும், சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் வைத்திருக்க வும் உதவும். குங்குமப்பூ-வேம்பு, துளசி: 3-4 குங்குமப்பூ இழைகளுடன் 4 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து சில நிமிடங்கள் ஊறவைத்துக்கொள்ள வேண்டும். பின்பு அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் வேப்பம் தூள், ஒரு டேபிள்ஸ்பூன் துளசி தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முகம் முழுவதும் தடவிவிட்டு உலர விடவும். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். அழகு நன்மைகள்: இந்த பேக்கில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன. அவை சருமத்திற்கு ஏராளமான நன்மைகளை வழங்கக்கூடியவை. இதனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முகப்பருக்கள் எட்டிப்பார்க்காது. குங்குமப்பூ-ரோஸ் வாட்டர்: ஒரு கிண்ணத்தில் 3 டேபிள்ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து அதில் 4-5 குங்குமப்பூ இழைகளை ஊறவைத்துக்கொள்ளவும். நன்கு ஊறியதும் பஞ்சை அதில் முக்கி முகம் முழுவதும் தடவிவிட்டு 30 நிமிடங்கள் உலர விடவும். பின்பு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். அழகு நன்மைகள்: சருமத்திற்கு பளபளப்பை ஏற்படுத்திக்கொடுக்கும். இளமையை தக்கவைத்துக்கொள்ளவும் உதவும். குங்குமப்பூ-சூரியகாந்தி விதைகள்: ஒரு கப் பாலில் ஒரு டீஸ்பூன் குங்குமப்பூ மற்றும் 3 டேபிள்ஸ்பூன் சூரியகாந்தி விதைகள் கலந்து இரவு முழுவதும் ஊறவைத்துக்கொள்ளவும். காலையில் இந்த பேக்கை நன்றாக குழைத்து தூரிகையை பயன்படுத்தி முகத்தில் தடவ வேண்டும். சிறிது நேரம் உலர விட்டுவிட்டு பின்பு குளிர்ந்த நீரில் கழுவிவிடவும். நன்மைகள்: இந்த பேஸ் பேக் கொலாஜன் மற்றும் எலாஸ்டின் உற்பத்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது. சருமத்திற்கு குறைபாடற்ற பிரகாசத்தை அளிக்கும். http://Facebook page / easy 24 news
Previous Post

சத்தான சுவையான கோதுமை ரவை பிசிபேளாபாத்

Next Post

குரவலூர் உக்கிர நரசிம்மர் கோவிலில் சிறப்பு வழிபாடு

Next Post

குரவலூர் உக்கிர நரசிம்மர் கோவிலில் சிறப்பு வழிபாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

பெரும் போராட்டத்திற்கு முன்னரே ‘கரப்பான்பூச்சி’ இயக்கத்தினரை ஒடுக்கும் நடவடிக்கையில் இந்திய பாதுகாப்புப் படை! 

பெரும் போராட்டத்திற்கு முன்னரே ‘கரப்பான்பூச்சி’ இயக்கத்தினரை ஒடுக்கும் நடவடிக்கையில் இந்திய பாதுகாப்புப் படை! 

October 11, 2026
ராம் நிஷாந்த் நடிக்கும் ‘சுடர்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

ராம் நிஷாந்த் நடிக்கும் ‘சுடர்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

October 11, 2026
டிபெண்டர்ஸ் வீரர் ஒருவர் அநாவசியமாக மஞ்சள் அட்டைக்கு இலக்கானார்; நியூ யங்ஸுடனான போட்டியில் டிபெண்டர்ஸ் இலகுவான வெற்றி

டிபெண்டர்ஸ் வீரர் ஒருவர் அநாவசியமாக மஞ்சள் அட்டைக்கு இலக்கானார்; நியூ யங்ஸுடனான போட்டியில் டிபெண்டர்ஸ் இலகுவான வெற்றி

October 10, 2026
போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்வு – நீதியமைச்சர்

சிறைச்சாலைச் சட்டங்கள் மற்றும் விதிகளைப் புதுப்பிக்க நியமிக்கப்பட்ட விசேட குழுவின் முதற்கட்டக் கூட்டம்!

October 10, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures