Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சம்பளம் தாமதிப்பதால் கால்பந்தாட்ட சம்மேளன ஊழியர்கள் தத்தளிப்பு

March 31, 2023
in News, Sports, முக்கிய செய்திகள்
0
3 ஆவது தடவையாக பிற்போடப்பட்ட சுப்பர் லீக் கால்பந்தாட்டத் தொடர்

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் நிருவாக சபை செயலிழந்துள்ளதன் காரணமாக சம்மேளன ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில், இந்த மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படாததன் காரணமாக தங்களது குடும்பத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாதுள்ளதாக சம்மேளனத்தில் தொழில்புரியும் ஊழியர்கள்  மிகுந்த கவலையுடன் தெரிவித்தனர்.

இந்த சிக்கல் தொடர்பாக விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்கள பணிப்பாளர் நாயகம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் ஆகியோருக்கு சில சம்மேளன ஊழியர்கள்  அறிவித்தபோதிலும் இதுவரை ஒரு பதிலும் கிடைக்கவில்லை என சம்மேளன  அதிகாரி ஒருவர் கூறினார்.

மார்ச் மாதத்திற்கான சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை. தமிழ் -சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வருடா வருடம் ஏப்ரல் மாத சம்பளம் முதல் வாரத்திலேயே வழங்கப்படுவதுண்டு. ஆனால், சம்மேளனத்தின் நிருவாக சபை செயலிழந்துள்ளதால் தமிழ் – சிங்கள புத்தாண்டையும் கொண்டாட முடியாத அவல நிலையை எதிர்கொண்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் நிர்வாகம் உருப்படியாக, சட்ட ரீதியாக இயங்கும்வரை நாடு முழுவதும் உள்ள கால்பந்தாட்ட சம்மேளன ஊழியர்கள் 75 பேர் சம்பளப் பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும் என அஞ்சுவதாக ஊழியகர்கள் சிலர் தெரிவித்தனர்.

சில வாரங்களுக்கு முன்னர் சம்மேளனத் தலைவரின் கெடுபிடி தாங்க முடியாமல் சில நிருவாக உத்தியோகத்தர்கள் தங்களது பதவிகளை இராஜினாமா செய்தனர். இன்னும் சில சிரேஷ்ட உத்தியோகத்தர்களும் விலகிச் சென்றனர். இது இவ்வாறிருக்க, இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்படுள்ளார்.

சம்மேளனத்தின் நிறைவேற்றுச் சபை கோரம் இழந்துள்ளதால் அது செயிலிழுந்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக அமைச்சர் உட்பட அமைச்சு அதிகாரிகளும் நன்கு அறிந்துள்ளபோதிலும் அவர்கள் யாருமே தங்களது சம்பளப் பிரச்சினையைத் தீர்த்துவைக்க நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை என சம்மேளனத்தின் மற்றொரு அதிகாரி சுட்டிக்காட்டினார்.

எனவே, இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன அதிகாரிகள், கால்பந்தாட்ட வீரர்கள், கழக மட்ட அதிகாரிகள் ஆகியோர் எதிர்நோக்கியுள்ள சகல பிரச்சினைகளுக்கும் முடிவுகட்டும் வகையில் சம்மேளனத்தின் பொதுச் சபையை சுயாதீனமாகக் கூட்டி பீபாவின் தடையை நீக்குவதற்கும் பீபாவின் கோரிக்கைக்கு அமைய யாப்பு விதிகளை திருத்தி அமைத்து தேர்தல் குழு ஒன்றை நியமித்து நிருவாக சபைத் தேர்தலை நடத்தவும் பொதுச் சபைக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் அனுமதி வழங்க வேண்டும் என்பதே கால்பந்தாட்ட குடும்பத்தினரின் ஏகோபித்த வேண்டுகோளாகும்.

Previous Post

கட்டணங்களில் திருத்தம்

Next Post

விடுதலை 1- விமர்சனம்

Next Post
விடுதலை 1- விமர்சனம்

விடுதலை 1- விமர்சனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026
வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

June 29, 2026
முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

June 29, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures