Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

சமகால பிரச்சனைகளை உரத்துப் பேசும் ஜெய்யின் ‘சட்டென்று மாறுது வானிலை’

May 13, 2026
in Cinema, News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சமகால பிரச்சனைகளை உரத்துப் பேசும் ஜெய்யின் ‘சட்டென்று மாறுது வானிலை’

தமிழ் திரை உலகில் பிரபல நடிகரான ஜெய் கதையின் நாயகனாக அதிரடியாக நடித்திருக்கும் ‘சட்டென்று மாறுது வானிலை’ எனும் திரைப்படம் – இன்றைய சமகாலத்து சமூகத்தில் உள்ள பிரச்சனைகளை அழுத்தமாக பேசும் படைப்பு என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் பாபு விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சட்டென்று மாறுது வானிலை’ திரைப்படத்தில் ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன், யோகி பாபு, கருடா ராம், ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பிவி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பாபு விஜய் தயாரித்திருக்கிறார்.

எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் ஏ .ஆர். முருகதாஸ்-  சசி, தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், தொழிலதிபர் சிவக்குமார் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.

படத்தின் நாயகன் நடிகர் ஜெய் பேசுகையில், ” இப்படத்தின் கதையை இயக்குநர் பாபு விஜய் சொன்னதும் எமக்கு பிடித்தது. இப்படத்தின் முதல் பாதியில் கொஞ்சம் விஜய் சாரின் ரசிகர்களுடைய அனுபவத் தருணங்கள் இருக்கும். அதாவது உடல் மொழி.. வசன உச்சரிப்பு ..இவற்றில் எல்லாம் அவரின் சாயல் இருக்கும். ஆனால் இரண்டாம் பாதியில் கதை முழுக்க வேறு ஒரு தளத்தில் பயணிக்கும். இந்தக் கதை அறிமுக இயக்குநருக்கு சவாலானது தான். கதைக்குத் தேவையான ஹீரோயிஸத்தையும் , கதையையும் சமநிலைப்படுத்தி இயக்குநர் உருவாக்கி இருக்கிறார். இன்றைய தலைமுறையினர் சந்திக்கும் முக்கிய பிரச்சனையையும் இயக்குநர் விவரித்திருக்கிறார். இந்த படத்தை நீங்கள் படமாளிகையில் பார்த்தால் கண்டிப்பாக ரசிப்பீர்கள் என நம்புகிறேன்” என்றார்.

Previous Post

பஞ்சாபை வீழ்த்தி இறுதிச் சுற்று வாய்ப்பை டெல்ஹி ஓரளவு உயிர்பெறச் செய்துகொண்டுள்ளது

Next Post

எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

Next Post
எரிபொருள் கியூ.ஆர் குறியீட்டை பெறுவதில் உள்ள சிக்கல்களைத் தீர்க்க புதிய நடவடிக்கை

எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

போதைப்பொருள் வழக்கில் சிக்கியவரை ஹெலிகாப்டரில் சென்று காப்பாற்றிய மகிந்த

June 27, 2026
அங்கீகாரம் – திரைப்பட விமர்சனம்

அங்கீகாரம் – திரைப்பட விமர்சனம்

June 27, 2026
மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு இலங்கையினால் தகுதிபெற முடியும் என ஹர்ஷித்தா சமரவிக்ரம நம்பிக்கை!

மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு இலங்கையினால் தகுதிபெற முடியும் என ஹர்ஷித்தா சமரவிக்ரம நம்பிக்கை!

June 26, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

June 26, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures