Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கோடீஸ்வர வர்த்தகரை சிறைப்படுத்திய இருவர் பொலிஸாரிடம் வசமாக சிக்கினர்

March 3, 2022
in News, Sri Lanka News
0
கிராம அலு­வ­ல­ரைத் தாக்­கி­ய குற்­றச்­சாட்­டில் நேற்று இரு­வர் கைது

இராணுவ புலனாய்வாளர்கள் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட இருவர், வெள்ளவத்தை –  ஹார்மர்ஸ் அவனியூ பகுதியில் கோடீஸ்வரர் ஒருவரின் வீட்டின் கீழ் தளத்தை நாள் வாடகை அடிப்படையில் பெற்று, வாடகையை  கேட்ட போது வீட்டின் உரிமையாளர் உள்ளிட்ட மூவரை சிறை பிடித்து , தடுத்து வைத்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் விஷேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது இரு சந்தேக நபர்கள் வெள்ளவத்தை பொலிஸாரால்  கைது செய்யப்பட்டு, கல்கிசை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில்,  வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர்  பிரசாத் டி சில்வாவின்  கீழ் சிறப்பு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

வெள்ளவத்தை  ஹார்மர்ஸ் அவனியூ பகுதியில், நாளொன்றுக்கு 10 ஆயிரம் ரூபா வாடகை அடிப்படையில் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர்  தனது வீட்டின் கீழ் மாடியை தங்கு விடுதியாக வழங்கியுள்ளார்.

அதன்படி, தம்மை இராணுவ புலனாய்வளர்கள் என கூறிக்கொண்ட இருவர் அவ்வீட்டின் கீழ் மாடியை அண்மையில் நாள் வாடகை அடிப்படையில் பெற்றுக்கொன்டுள்ளனர்.

எனினும் வீட்டின் வடகை பணத்தை அவர்கள் வழங்காததால், அதனைப் பெற வீட்டின் உரிமையாளரான கோடீஸ்வர வர்த்தகர் கடந்த பெப்ரவரி 27 ஆம் திகதி மாலை வேளையில், கீழ் மாடிக்கு சென்றுள்ளார்.

அவர் சென்று வாடகை பணத்தை  கேட்ட போது, அவரை உள்ளே  இழுத்து, அவரது கைகளுக்கு விலங்கிட்டு, வயர்கள் உள்ளிட்டவற்றைக் கொண்டு அவர் கடுமையாக சந்தேக நபர்களால் தாக்கப்பட்டுள்ளார்.

வாடகை பணம் பெறச் சென்றவரை காணாமல் வர்த்தகரின் சகோதரரும் உறவினர் ஒருவரும் பின்னர் கீழ் மாடியை நோக்கி  விசாரிப்பதற்காக சென்றுள்ளதுடன் அவர்களையும் சந்தேக நபர்கள் தங்குமிடத்திலேயே கட்டி சிறைவைத்து தாக்கியுள்ளனர்.

இதன்போது தாம் இராணுவ புலனாய்வளர்கள் எனவும்,  வர்த்தகரின் சொத்து விபரங்கள் மற்றும் அதனை உழைத்த முறைமை தொடர்பிலும் சுமார் 8 மணி நேரம் அவர்கள் விசாரித்துள்ளனர்.

அதன் பின்னர் மறு நாள்  இராணுவ புலனாய்வு அதிகாரி ஒருவரும் சட்டத்தரணி ஒருவரும் வருவர் எனவும் அவர்களுடன் பேசி சமரசம் செய்துகொள்ளலாம் எனவும்  சந்தேக நபர்கள், தாம் சிறைப் பிடித்து தாக்கிய மூவரிடமும் தெரிவித்துள்ளதுடன், அது தொடர்பில் பொலிஸாரிடமோ வேறு யாரிடமோ வாய்த்திறக்கக் கூடாது என கட்டளையிட்டு, தொடர்ந்தும் அவர்களை சிறைப்படுத்தி வைத்திருந்துள்ளனர்.

இந் நிலையில்,  பின்னர் சந்தேக நபர்கள் மச்சினன் முறையிலான நபரை மட்டும்  மேல் மாடிக்கு செல்ல அனுமதித்துள்ள நிலையில், அதன்போது அவர் விடயத்தை வெள்ளவத்தை பொலிசாருக்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிசாத் டி சில்வா, குற்றவியல் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சிசிர குமார,  உப பொலிச் பரிசோதகர் ரந்திக,  பொலிஸ் சார்ஜ்ன் (5346) சஞ்ஜீவ,  பொலிஸ் கான்ஸ்டபிள்களான ஹசித்த் (12250),சில்வா (88829), ராஜபக்ஷ் (19191), தர்மசிறி (30867) உள்ளிட்ட குழுவினர்  உடனடியாக செயற்பட்டு ஹார்மர்ஸ் அவனியூ பகுதி வீட்டை சுற்றி வளைத்து சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.

இதன்போது சந்தேக நபர்கள் வீட்டு உரிமையாளர் உள்ளிட்டோரை சிறைப்படுத்தி வைக்க பயன்படுத்திய கை விலங்கு, வயர்கள் உள்ளிட்டவற்றை மீட்டுள்ள பொலிஸார் அது தொடர்பில் விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மீட்கப்பட்ட கை விலங்கானது இராணுவ கோப்ரல் ஒருவரிடமிருந்து தமக்கு கிடைத்ததாக சந்தேக நபர்கள் தெரிவித்துள்ள போதும் அதன் உண்மைத் தன்மையை வெளிப்படுத்த மேலதிக விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

வாழைச்சேனையை சேர்ந்த சந்தேக நபர்கள், கல்கிசை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர்  14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசார்ணைகளை கொழும்பு தெற்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சிசிர பெத்ததந்திரியின் ஆலோசனை மற்றும் மேற்பார்வையில் வெள்ளவத்தை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

உக்ரேனில் இரண்டாவது இந்திய மாணவர் உயிரிழப்பு

Next Post

தடுப்பூசி பெறாதவர்களை பொது இடங்களில் நுழைவதை தடுக்கும் வர்த்தமானியை சவாலுக்குட்படுத்தி வழக்கு

Next Post
டீ.கே.பி. தசாநாயக்கவுக்கான தீர்ப்பை கோட்டை நீதவானே வழங்க வேண்டும்

தடுப்பூசி பெறாதவர்களை பொது இடங்களில் நுழைவதை தடுக்கும் வர்த்தமானியை சவாலுக்குட்படுத்தி வழக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு இலங்கையினால் தகுதிபெற முடியும் என ஹர்ஷித்தா சமரவிக்ரம நம்பிக்கை!

மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு இலங்கையினால் தகுதிபெற முடியும் என ஹர்ஷித்தா சமரவிக்ரம நம்பிக்கை!

June 26, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

June 26, 2026
என் மீதான குற்றச்சாட்டுப் பத்திரத்தை வடக்கு ஆளுநர் வழங்கவில்லை ; நீதி கோரி நீதிமன்றம் செல்வேன் – ஞா.கிசோர் 

என் மீதான குற்றச்சாட்டுப் பத்திரத்தை வடக்கு ஆளுநர் வழங்கவில்லை ; நீதி கோரி நீதிமன்றம் செல்வேன் – ஞா.கிசோர் 

June 26, 2026
மிகக் கொடூரமான கடந்த ஆட்சியில் கூட இத்தகைய ஜனநாயக விரோத செயல்கள் இடம்பெறவில்லை

மிகக் கொடூரமான கடந்த ஆட்சியில் கூட இத்தகைய ஜனநாயக விரோத செயல்கள் இடம்பெறவில்லை

June 26, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures