Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொடூரமான சித்திரவதை தொடர்பாக வருந்தத்தக்க அனுபவங்களைக் கேட்டறிந்தேன் – பென் எமர்சன்!

July 20, 2017
in News
0

இலங்கையில் மிகவும் கொடூரமான சித்திரவதைகள் தொடர்பில் வருந்தத்தக்க அனுபவங்களைக் கேட்டறிந்ததாக அண்மையில் சிறிலங்காவுக்குப் பயணம் செய்த ஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சனை மேற்கோள் காட்டி ஐநாவினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த வாரம் சிறிலங்காவுக்கு வருகை தந்த ஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன், அனுராதபுரம் சிறைச்சாலைக்குப் பயணம் செய்து அங்கு பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு தடுத்துவைத்துள்ளவர்களைச் சந்தித்திருந்தார்.

ஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சனின் சிறிலங்காப் பயணத்தினையடுத்து ஐநாவினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சிறிலங்காவில் பயங்கரவாதத் தடைச்சட்டமானது மிகவும் ஆழமான தவறுகளைக் கொண்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படுபவர்கள் மீது மேற்கொள்ளப்படும் சித்திரவதையானது வழமையானதும், அதிகளவிலும் காணப்படுகின்றது.

“சட்டம், தமிழ்ச் சமூகத்துக்கு எதிராக ஒப்பீட்டளவில் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதன் காரணமாக, அரசின் மெருகூட்டப்பட்ட சித்திரவதைக் கருவியின் கடுமையான பாதிப்பை, அச்சமூகம் எதிர்கொண்டுள்ளது.

“பாதுகாப்புத் துறையில், சித்திரவதை என்பது ஆழமாகப் பதியப்பட்டுள்ளது. கொடூரமான சித்திரவதை தொடர்பில், வருந்தத்தக்க, நேரடியான அனுபவங்களை நான் கேட்டறிந்தேன்.

“தடிகளால் அடித்தல், உடலுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் இருத்துதல், மண்ணெண்ணெயில் தோய்க்கப்பட்ட பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்து மூச்சுத்திணற வைத்தல், விரல் நகங்களைப் பிடுங்குதல், விரல் நகங்களுக்குக் கீழ் ஊசிகளைச் செருகுதல்,

பல்வேறு வகையிலான தண்ணீர்ச் சித்திரவதைகள், பெருவிரல்களில் கட்டிப் பல மணி நேரங்களுக்குத் தொங்க விடுதல், பிறப்புறுப்புகளை சிதைத்தல் ஆகியவற்றை, இந்தச் சித்திரவதைகள் உள்ளடக்குகின்றன”

2016ம் ஆண்டின் இறுதியில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் 80 சதவீதமானோர், சித்திரவதை, பௌதீக ரீதியான தவறான நடத்தை ஆகியவற்றைச் சந்தித்ததாகக் கூறுகின்றனர்.

சித்திரவதை, இவ்வளவு தூரத்துக்கு அதிர்ச்சிகரமாகக் காணப்படுகின்ற போதிலும், பயன்தரக்கூடிய விசாரணைகள் இல்லாமையைக் காணப்படுகின்றது.

12 சந்தேகநபர்கள், விசாரணை எதுவுமின்றி 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலதிகமாக 70 பேர், 5 ஆண்டுகளுக்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை, அதிகளவிலான பாதுகாப்புச் சவாலைச் சந்திக்கிறது. எனினும், சீர்திருத்தம், நீதி, மனித உரிமைகள், ஏறத்தாழ அதே இடத்திலேயே இருக்கின்றது.

நிலைத்திருக்கும் சமாதானத்தை உறுதிப்படுத்துவதற்காக, நிலைமாறு கால நீதிக்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கும், பாதுகாப்புத் துறையின் அவசரமான சீர்திருத்தத்துக்கும் வழங்கிய சர்வதேச அப்பணிகளை, இலங்கை நிறைவேற்ற வேண்டும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Previous Post

பொதுத்துறை மூலம் தமிழக அரசுக்கு ரூ.2,825 கோடி நஷ்டம்- நிதித்துறை

Next Post

வித்தியா கொலை வழக்கில் சிறிகஜன் குற்றவாளியா?

Next Post
வித்தியா கொலை வழக்கில் சிறிகஜன் குற்றவாளியா?

வித்தியா கொலை வழக்கில் சிறிகஜன் குற்றவாளியா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜஸ்டின் க்றீவ்ஸ் அசாத்திய சாதனை; பாகிஸ்தானை பதம் பார்த்தது மேற்கிந்தியத் தீவுகள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜஸ்டின் க்றீவ்ஸ் அசாத்திய சாதனை; பாகிஸ்தானை பதம் பார்த்தது மேற்கிந்தியத் தீவுகள்

July 29, 2026
காகிதமற்ற ஆவண முறைமை ஒக்டோபர் முதல் நடைமுறைப்படுத்தத் தயார் ; ஜனாதிபதியின் செயலாளர்!

காகிதமற்ற ஆவண முறைமை ஒக்டோபர் முதல் நடைமுறைப்படுத்தத் தயார் ; ஜனாதிபதியின் செயலாளர்!

July 29, 2026
இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து தீவக மீனவர்கள் கடலில் கறுப்புக்கொடி போராட்டம்!

இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து தீவக மீனவர்கள் கடலில் கறுப்புக்கொடி போராட்டம்!

July 29, 2026
மூலதனச் செலவினத்தை அதிகரிக்கும் நோக்குடன் அடுத்தாண்டுக்கான பொருளாதாரத் திட்டங்கள் தயாரிப்பு |   அநுர

மூலதனச் செலவினத்தை அதிகரிக்கும் நோக்குடன் அடுத்தாண்டுக்கான பொருளாதாரத் திட்டங்கள் தயாரிப்பு | அநுர

July 29, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures