Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கூட்டமைப்பை திருப்திப்படுத்தினால் சிங்கள மக்களின் ஆதரவை இழப்பீர்!

May 9, 2020
in News, Politics, World
0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் அரசு விழிப்பாகவே இருக்கவேண்டும். பெரும்பான்மையின மக்கள் வழங்கிய ஆணையைக் காட்டிக்கொடுக்கும் வகையில் கூட்டமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படக்கூடாது. அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கவும் மாட்டோம் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

வடக்கு, கிழக்கில் வாழும் மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் அரசு செய்து கொடுக்கவேண்டும். இது விடயத்தில் நாம் உறுதியாகவே இருக்கின்றோம். ஆனால், தமிழ்க் கைதிகளின் விடுதலை, அதிகாரப் பகிர்வு ஆகியன தொடர்பில் கூட்டமைப்பால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் தொடர்பில் விழிப்பாகவே இருக்கவேண்டும்.

கைதிகள் விடுதலை உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக இதற்கு முன்னரும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன. கூட்டமைப்பின் அரசியல் நிகழ்ச்சி நிரல் என்பது வேறுபட்டது. ஆகவே, விழிப்பாக இருக்கவேண்டும். இது விடயத்தில் ராஜபக்ஷ அரசு எவ்வாறு செயற்படும் என்பதை அவதானித்துக் கொண்டிருக்கின்றோம்.

கூட்டமைப்புக்குத் தேவையானவற்றை செய்வதற்கு முற்பட்டால் சிங்கள, பௌத்த மக்களின் ஆதரவை அரசு இழக்கநேரிடும். பெரும்பான்மையான மக்கள் வழங்கிய ஆணையைக் காட்டிக்கொடுத்துவிட்டு, கூட்டமைப்பின் ஒத்துழைப்பை பெறுவதற்கு அரசு முயற்சிக்குமானால் அதற்கு நாம் இடமளிக்கமாட்டோம். கடும் எதிர்ப்பை வெளியிடுவோம்.

நெருக்கடியான சூழ்நிலையைப் பயன்படுத்தி தனது நோக்கத்தை அடைந்து கொள்வதற்கே கூட்டமைப்பு முயற்சிக்கிறது. இதற்கும் நாம் இடமளிக்கமாட்டோம். ஆகவே, அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடவேண்டாம் என்று பிரதமரிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

அதேவேளை, போர் முடிவடைந்த பின்னர் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தாது, வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கியிருக்கவேண்டும். அதனை மஹிந்த அரசு செய்யவில்லை. சிறிமாவோ பண்டாரநாயக்க அன்று மக்கள் பிரச்சினைகளைத் தீர்த்துவைத்தார். அவ்வாறு செயற்பட்டிருக்கவேண்டும் என தெரிவித்துள்ளார் .

Previous Post

இலங்கையை ஐக்கியப்படுத்த கூட்டமைப்பு இணங்காது மாற்று அணியே தேவை!

Next Post

யாழில் தனிமைப்படுத்தப்பட்ட 298 பேர் இன்று விடுவிப்பு!!

Next Post

யாழில் தனிமைப்படுத்தப்பட்ட 298 பேர் இன்று விடுவிப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

பல்கலைக்கழக கல்வியாளர்களை குறிவைக்கும் பிரசாரங்கள்! கண்டனம் தெரிவித்த யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

பல்கலைக்கழக கல்வியாளர்களை குறிவைக்கும் பிரசாரங்கள்! கண்டனம் தெரிவித்த யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

July 9, 2026
நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் செகண்ட் லுக் வெளியீடு

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் செகண்ட் லுக் வெளியீடு

July 9, 2026
அர்ச்சுனாவை எதிர்க்கட்சித் தலைவராக்குங்கள் :விமல் வீரவன்ச அறிவிப்பு

ஆடையை கழற்றிக் காட்டவா?! – பாராளுமன்றத்தில் அர்ச்சுனா தடாலடி பேச்சு    

July 9, 2026
மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமலுக்கு எதிரான வழக்கு…! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

July 8, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures