Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

குசல் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணி பாகிஸ்தான் சென்றடைந்தது

October 5, 2026
in News, Sports, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
குசல் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணி பாகிஸ்தான் சென்றடைந்தது

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ராவல்பிண்டியில் எதிர்வரும் 9ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மூன்று போட்டிகளைக் கொண்ட சர்வதேச ரி20 தொடரில் பங்குபற்றுவதற்காக குசல் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணியினர் பாகிஸ்தான் சென்றடைந்துள்ளனர்.

உடற்தகுதியின்மை மற்றும் உபாதையிலிருந்து மீளாததன் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான ரி20 தொடருக்கு செல்லாமல் ஓய்வுபெற்றுவந்த குசல் மெண்டிஸ் பின்னர் இங்கிலாந்துக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடினார்.

இப்போது ரி20 அணித் தலைவர் பதவியைப் மீண்டும் பொறுப்பேற்று பாகிஸ்தான் பயணமாகியுள்ளார்.

அத்துடன் சுழல்பந்துவீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த், ஆரம்ப வீரர் சினேத் ஜயவர்தன, சஹான் ஆராச்சிகே, சமிந்து விக்ரமசிங்க, பினுர பெர்னாண்டோ ஆகியோரும் குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்துக்கு எதிரான ரி20 தொடருக்கான இலங்கை குழாத்தில் இடம்பெற்ற 7 வீரர்கள் பாகிஸ்தானுக்கான சுற்றுப் பயணத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

பதில் அணித் தலைவராக விளையாடிய சரித் அசலன்க, பெத்தும் நிஸ்ஸன்க, இங்கிலாந்தில் உபாதைக்குள்ளான வனிந்து ஹசரங்க, பவன் ரத்நாயக்க, தரிந்து ரத்நாயக்க, டில்ஷான் மதுஷன்க ஆகிய ஏழு பேரே குழாத்திலிருந்து நீக்கப்பட்ட வீரர்களாவர்.

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான 3 சர்வதேச ரி20 போட்டிகள் ராவல்பிண்டியில் அக்டோபர் 9, 11, 13ஆம் திகதிகளில் நடைபெறும்.

அடுத்த இரண்டு வருடங்களில் நடைபெறவுள்ள இரண்டு வகை உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கு இப்போதிருந்தே அணியைக் கட்டியெழுப்பும் பொருட்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெறவுள்ள இருதரப்பு சர்வதேச ரி20 தொடரையும், பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து ஆகியன பங்குபற்றும் மும்முனை சர்வதேச ஒருநாள் தொடரையும் பயன்படுத்தவுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை இங்கிருந்து புறப்படுவதற்கு முன்னர் இலங்கை அணித் தலைவர் குசல் மெண்டிஸ் தெரிவித்தார்.

‘பாகிஸ்தான் சுற்றுப்பயணம் எளிதானது அல்ல. அங்கு சர்வதேச ரி20 மற்றும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளோம். நாங்கள் உறுதியான திட்டத்துடன் விளையாடவேண்டும். இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து, ஒவ்வொரு வடிவத்திற்கும் குறைந்தது 15 அல்லது 16 வீரர்களைக் கொண்ட அணியைத் தயார் செய்ய வேண்டும்’ என அவர் மேலும் கூறினார்.

இலங்கை குழாம்

காமில் மிஷார, சினேத் ஜயவர்தன, குசல் மெண்டிஸ் (தலைவர்), லஹிரு உதார, சஹான் ஆராச்சிகே, கமிந்து மெண்டிஸ், தசுன் ஷானக்க, சமிந்து விக்ரமசிங்க, துனித் வெல்லாலகே, மஹீஷ் தீக்ஷன, விஜயகாந்த் வியாஸ்காந்த், பினுர பெர்னாண்டோ, நுவன் துஷார, ஏஷான் மாலிங்க, துஷ்மன்த சமீர.

Previous Post

இயக்கச்சியில் தனியார் காணிகளில் மணல் கொள்ளை ; அரச திணைக்களங்களில் முறைப்பாடு அளித்தும் நடவடிக்கை இல்லை!

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

குசல் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணி பாகிஸ்தான் சென்றடைந்தது

குசல் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணி பாகிஸ்தான் சென்றடைந்தது

October 5, 2026
இயக்கச்சியில் தனியார் காணிகளில் மணல் கொள்ளை ; அரச திணைக்களங்களில் முறைப்பாடு அளித்தும் நடவடிக்கை இல்லை!

இயக்கச்சியில் தனியார் காணிகளில் மணல் கொள்ளை ; அரச திணைக்களங்களில் முறைப்பாடு அளித்தும் நடவடிக்கை இல்லை!

October 5, 2026
கிளிநொச்சியில் சிறுவர் தினத்தில் சோகம் : அயல்வீட்டு இளைஞனின் அச்சுறுத்தலால் 17 வயது சிறுமி உயிர்மாய்ப்பு

கிளிநொச்சியில் சிறுவர் தினத்தில் சோகம் : அயல்வீட்டு இளைஞனின் அச்சுறுத்தலால் 17 வயது சிறுமி உயிர்மாய்ப்பு

October 5, 2026
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு கோரி சவூதி தூதுவரை சந்திக்க தமிழ் – முஸ்லிம் கட்சிகள் அனுமதி கோரிக்கை

சிவராசா அனோஜன் விவகாரம் : சவுதி சென்றது விசேட சட்டத்தரணிகள் குழு

October 5, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures