Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கிளிநொச்சியில் சிறுவர் தினத்தில் சோகம் : அயல்வீட்டு இளைஞனின் அச்சுறுத்தலால் 17 வயது சிறுமி உயிர்மாய்ப்பு

October 5, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கிளிநொச்சியில் சிறுவர் தினத்தில் சோகம் : அயல்வீட்டு இளைஞனின் அச்சுறுத்தலால் 17 வயது சிறுமி உயிர்மாய்ப்பு

கிளிநொச்சி, உருத்திரபுரம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுமி உலக சிறுவர் தினமான ஒக்டோபர் 1ஆம் திகதி (கடந்த வியாழக்கிழமை) தனது வீட்டில் உயிர்மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சிறுவர் தின கொண்டாட்டங்கள் நடைபெறவேண்டிய நாளில் சிறுமி ஒருவர் உயிர்மாய்த்துக்கொண்டமை மனித உரிமைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு குறித்த தீவிர கேள்விகளை எழுப்பியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தகவல்களின்படி, உயிரிழந்த சிறுமி உயிர்மாய்ப்புக்கு முன்னர் எழுதியதாகக் கூறப்படும் ஒரு கடிதம் சமூக வலைத்தளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அக்கடிதத்தில், தனது புகைப்படங்களை வைத்துக்கொண்டு அயல்வீட்டு இளைஞர் ஒருவர் தன்னுடன் தவறான உறவுக்கு வருமாறு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வந்ததாகவும், அந்த புகைப்படங்களை வேறு சில நபர்களுக்கும் அவர் அனுப்பியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, புதிய தொலைபேசி இலக்கங்களில் இருந்து தன்னைத் தொடர்புகொண்ட ஏனைய நபர்களும் அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்வையிட்டதாகக் கூறியதாக அக்கடிதம் வெளிப்படுத்துகிறது.

சிறுமி குளித்துக்கொண்டிருந்த வேளையில் அயல்வீட்டு இளைஞர் மறைந்திருந்து புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுத்ததாகவும், அந்த ஆபாசத் தகவல்களைக் காட்டி சிறுமியைத் தொடர்ந்து அச்சுறுத்தி வந்ததாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தொடர்ச்சியான இந்த மன உளைச்சலும் மிரட்டல்களும் தாங்க முடியாத நிலையிலேயே சிறுமி இந்த விபரீத முடிவைத் தேடிக்கொண்டுள்ளார் என்பது முதற்கட்ட விசாரணைகளில் தெரியவருகிறது.

எனினும், இவ்வளவு தீவிரமான குற்றச்சாட்டுக்கள் மற்றும் உயிர்மாய்ப்பு கடிதம் உள்ளபோதிலும், சம்பந்தப்பட்ட இளைஞனைப் பொலிஸார் விசாரணைக்காக அழைத்து வாக்குமூலம் மட்டுமே பெற்றுக்கொண்டு உடனடியாக விடுவித்துள்ளதாக சமூக செயற்பாட்டாளர்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளனர்.

பொலிஸாரின் இந்த மெத்தனப்போக்கு காரணமாக சிறுமியின் மரணத்துக்கு உரிய நீதி கிடைக்கவில்லை எனவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் தொழில்நுட்ப துஷ்பிரயோகங்களும் கிராமப்புறங்களிலும் தீவிரமடைந்து வருவதற்கு இந்தச் சம்பவம் ஒரு சாட்சியாக அமைந்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், சிறுமியின் மரணத்துக்கு நீதி கிடைக்கவேண்டும் என்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Previous Post

சிவராசா அனோஜன் விவகாரம் : சவுதி சென்றது விசேட சட்டத்தரணிகள் குழு

Next Post

இயக்கச்சியில் தனியார் காணிகளில் மணல் கொள்ளை ; அரச திணைக்களங்களில் முறைப்பாடு அளித்தும் நடவடிக்கை இல்லை!

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

வடக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

November 22, 2026
ஆகாயத்தில் ஒரு தாரகை – திரைப்பட விமர்சனம்

ஆகாயத்தில் ஒரு தாரகை – திரைப்பட விமர்சனம்

November 22, 2026
இந்திய – இலங்கை இளைஞர் நட்புறவை வலுப்படுத்தும் ‘மைத்திரி சேது யாத்திரை 2027’ யாழ்ப்பாணத்தில் நிறைவு

இந்திய – இலங்கை இளைஞர் நட்புறவை வலுப்படுத்தும் ‘மைத்திரி சேது யாத்திரை 2027’ யாழ்ப்பாணத்தில் நிறைவு

November 22, 2026
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு பிடியாணை

அனுமதியின்றி ஐந்து பலா மரங்களை வெட்டிய வெளிநாட்டவர் வெலிகமவில் கைது

November 22, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures