Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

கவின் நடிக்கும் ‘பிளடி பெக்கர்’ படத்துக்கான இசை வெளியீடு

October 28, 2024
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
கவின் நடிக்கும் ‘பிளடி பெக்கர்’ பட அப்டேட்

தமிழ் திரையுலகில் சந்தை மதிப்புள்ள நட்சத்திர நடிகராக அவதாரம் எடுத்திருக்கும் நடிகர் கவின் கதையின் நாயகனாக நடித்து , எதிர்வரும் தீபாவளி திருநாளன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் ‘பிளடி பெக்கர்’ எனும் திரைப்படத்தினை விளம்பரப்படுத்தவும், ரசிகர்களின் கவனத்தை கவரவும் , ‘பெக்கர்வாலா’ எனும் பெயரில் மியூசிக் வீடியோ ஒன்றை படக்குழுவினர் உருவாக்கி வெளியிட்டுள்ளனர்.

அறிமுக இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பிளடி பெக்கர் ‘ எனும் திரைப்படத்தில் கவின், ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுஹாதா, டி எம் கார்த்திக் , அக்ஷயா ஹரிஹரன், பிரியதர்ஷினி ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார் இந்த திரைப்படத்தை பிளமென்ட் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர் நெல்சன் திலிப் குமார் தயாரித்திருக்கிறார்.

சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ , ஜெயம் ரவியின் ‘பிரதர்’ என தீபாவளிக்கு வெளியாகும் இரண்டு திரைப்படங்களிலும் நட்சத்திர நடிகர்கள் நடித்திருப்பதாலும், முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்கள் தயாரித்திருப்பதாலும் , அப்படத்தினை ரசிகர்களுக்கு சென்றடையச் செய்ய தயாரிப்பு நிறுவனம் பல வழிகளில் ஈடுபட்டிருக்கிறது.

இந்நிலையில் புதிய நட்சத்திரமாக உருவெடுத்து வரும் கவின் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘பிளடி பெக்கர் ‘ எனும் திரைப்படமும் தீபாவளி திருநாளன்று வெளியாகிறது. இந்த படத்தையும் ரசிகர்களை சென்றடைய செய்வதற்காக படக் குழுவினர் பல்வேறு வகையினதான கவன ஈர்ப்பு விளம்பர பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள் . 

இதனைத் தொடர்ந்து ‘பெக்கர்வாலா ‘ எனும் பெயரில் பாடல் ஒன்றை உருவாக்கி , அதனை நடனத்துடன் படமாக்கி வெளியிட்டுள்ளனர்.  இந்த பாடலை பாடலாசிரியர் விஷ்ணு எடவன் மற்றும் ஏ ஆர் ஆஷிக் ஆகியோர் இணைந்து எழுதி இருக்க , பின்னணி பாடகர்கள் அந்தோணி தாசன்- ஜென் மார்டின் மற்றும் பாடகி முத்துலட்சுமி ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். இந்த பாடலுக்கு கவின் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடனமாடி இருக்கிறார்கள். படத்தில் இடம்பெறாத இந்தப் பாடலும் துள்ளலிசை பாணியில் அமைந்திருப்பதால் இசை ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது .

Previous Post

ஏகோபித்த தலைமைத்துவம்..! சிறீதரன் வழங்கிய உறுதிமொழி

Next Post

12 பேரை முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்ற சாரதி கைது

Next Post
850,000 முச்சக்கரவண்டி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்திற்கு ஆபத்து

12 பேரை முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்ற சாரதி கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சோமரத்ன ராஜபக்‌சவிடம் பன்னாட்டு விசாரணை! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

சோமரத்ன ராஜபக்‌சவிடம் பன்னாட்டு விசாரணை! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

June 24, 2026
பிளாக்மெயில் – திரைப்பட விமர்சனம்

நடிகர் ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘இம்மாற்றல்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

June 24, 2026
அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

June 23, 2026
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

அரச பாடசாலைகளில் முதலாம் தர மாணவர் சேர்க்கைக்கான புதிய சுற்றுநிருபத்துக்கு அமைச்சரவை அனுமதி

June 23, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures