கபாலியில் நடித்ததற்கு கேங்ஸ்டர்களிடமிருந்து ரஜினிக்கே மிரட்டலா? அதிர்ச்சி செய்தி
சூப்பர் ஸ்டார் நடிப்பில் திரையரங்கில் வசூல் வேட்டை நடத்தும் படம் கபாலி. இப்படத்தின் வசூல் இதுவரை இந்திய சினிமாவே பார்த்திராத ஒன்றாக உள்ளது.
இந்நிலையில் கபாலி படத்தில் வருவது போல் உண்மையாகவே மலேசியாவில் இரண்டு நம்பர் கேங் உள்ளது. இதில் ஒரு கேங்கை சார்ந்தவர்கள் இந்த படத்தில் ரஜினி எங்களை அவமதித்துவிட்டார் என கூறியுள்ளார். மேலும், ரஜினிக்கு இது எச்சரிக்கை, இனி இப்படிப்பட்ட படங்களில் நடிக்கக்கூடாது எனவும் கூறியுள்ளார். இந்த நிலை தொடர்ந்தால் நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம் என கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து மற்றொரு கேங் ஆள், ஆமாம், ரஜினி எங்க கேங் ஆட்களை பற்றி தான் படத்தில் பல காட்சிகளில் வெளிப்படுத்தினார், உங்களால் என்ன செய்ய முடியும்? என அவர்களுக்கு பதிலடி தருவது போல் பல சென்ஸார் வார்த்தைகளால் ஒரு வீடியோ உலா வருகின்றது.