Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனை விடுவிக்க இராஜதந்திர ரீதியில் தலையிடுங்கள்

September 21, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனை விடுவிக்க இராஜதந்திர ரீதியில் தலையிடுங்கள்

சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் கருத்தொன்றை அடிப்படையாகக் கொண்டு சவூதி அரேபிய நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் இலங்கைப் பிரஜையான அனோஜனை நிபந்தனையின்றி விடுதலை செய்வதற்கு இராஜதந்திர ரீதியான தலையீட்டை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் போராட்ட முன்னணியின் செயற்பாட்டாளர் வசந்த முதலிகே வலியுறுத்தியுள்ளார்.

அனோஜனின் குடும்பத்தினர், பிரதேசவாசிகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் அடங்கிய குழு கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதரகத்துக்கு திங்கட்கிழமை (21) சென்று, அவரை மன்னித்து விடுதலை செய்து மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருமாறு கோரி கடிதம் ஒன்றை கையளிக்க முயன்றது.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வசந்த முதலிகே மேலும் தெரிவிக்கையில்,

‘சவூதி அரேபிய நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் சகோதரரின் குடும்பத்தினருடன் சவூதி அரேபிய தூதரகத்துக்கு வந்துள்ளோம். சமூக ஊடகத்தில் அவர் வெளியிட்ட கருத்தொன்றை அடிப்படையாகக் கொண்டு அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முதலில் நாம் வலியுறுத்த வேண்டியது, இது நியாயமானதல்ல என்பதாகும். சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்ட கருத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பின்னர் அவர் மன்னிப்பும் கோரியுள்ளார். அந்த விடயம் தொடர்பில் தனது கவலையையும் வருத்தத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ள நிலையில், அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருப்பது கவலைக்குரிய நிலைமையாகும்.

அதனால்தான் இன்று அனோஜனின் தாயார் மற்றும் குடும்பத்தினருடன் தூதரகத்துக்கு வந்து இந்த விடயம் தொடர்பில் பேசுவதற்கு தீர்மானித்தோம். கடந்த காலங்களில் இலங்கைத் தொழிலாளர்கள் பல்வேறு நாடுகளில் பல்வேறு விதமான துன்பங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. அதேபோன்று அனோஜனுக்கும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுமானால், இலங்கைப் பிரஜைகள் என்ற வகையில் நாம் அதனை மிகுந்த கவலையுடனும் அதிர்ச்சியுடனும் பார்க்க வேண்டிய நிலை ஏற்படும்.

வெளிநாடுகளுக்குச் சென்று உழைத்து இலங்கைக்கு டொலர்களை அனுப்பும் மக்களை ‘நாட்டின் வீரர்கள்’ என்று அழைத்தோம். அதேவேளை, பாகிஸ்தானில் பிரியந்த குமார தியவடனவும் இதுபோன்றதொரு சம்பவத்துடன் தொடர்புபட்டு கொலை செய்யப்பட்டார்.

எனவே, வெளிநாடுகளில் பணியாற்றி பில்லியன் கணக்கான டொலர்களை இலங்கைக்கு அனுப்பும் மக்களை ‘நாட்டின் வீரர்கள்’ என்று அழைப்பது மாத்திரம் போதுமானதல்ல. அனோஜன் போன்றவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை நாம் கண்டறிய வேண்டும். இந்த விடயத்தில் அனோஜனை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும். அவரை விடுதலை செய்வதற்கு இலங்கை மக்களாகிய நாம் எம்மால் முடிந்த அதிகபட்ச தலையீட்டை மேற்கொள்ள வேண்டும்.

இலங்கை மக்கள் எந்தவிதமான பேதங்களுமின்றி அனோஜனை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை எம்மால் முடிந்த வகையில் முன்வைக்க வேண்டும். இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அனோஜனின் தலை துண்டிக்கப்படக் கூடாது. ஒரு சிறிய கருத்தை அடிப்படையாகக் கொண்டு அனோஜனை கொலை செய்யக் கூடாது. அவருக்கு நியாயமற்ற முறையில் மரண தண்டனை வழங்கக் கூடாது. இதற்காக இராஜதந்திர ரீதியாக மேற்கொள்ளக்கூடிய அனைத்து அழுத்தங்களையும் மேற்கொள்ளுமாறு கோருகிறோம்.

இலங்கை அரசாங்கமும் இதில் பொறுப்பு உள்ளது. அரசாங்கம் விரைவாகத் தலையிட்டு, அவசர நடவடிக்கையின் ஊடாக அனோஜனை விடுதலை செய்வதற்கான அணுகுமுறையை முன்னெடுக்க வேண்டும். நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நிலையிலும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் இந்த விடயத்தில் இராஜதந்திர ரீதியாக தலையிட முடியும். அந்தத் தலையீட்டின் ஊடாக அனோஜனை விடுதலை செய்வதற்கான இராஜதந்திர அணுகுமுறையை முன்னெடுக்க வேண்டும்.

இது தொடர்பில் ஜனாதிபதியுடன் குடும்பத்தினருடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக எமக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கலந்துரையாடலை நாம் சாதகமாக எதிர்பார்க்கிறோம். முக்கியமாக அனோஜனை விடுதலை செய்து மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரவேண்டும்.

இதற்கு அப்பால், இலங்கையிலிருந்து ஜப்பான், அவுஸ்திரேலியா, கொரியா, மத்திய கிழக்கு நாடுகள், சவூதி அரேபியா என பல்வேறு நாடுகளுக்குச் சென்று பணியாற்றும் தொழிலாளர்கள் தொடர்பில் சிறந்த கொள்கையொன்றை அரசாங்கம் உருவாக்க வேண்டும். அவர்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கும் தேவையான தலையீடுகளை மேற்கொள்வதற்கும் இந்தச் சந்தர்ப்பம் காரணமாக அமைய வேண்டும். குறிப்பாக அனோஜனுக்கு விடுதலை வேண்டும். அவரை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வர வேண்டும். அதற்காக எம்மால் மேற்கொள்ளக்கூடிய அதிகபட்ச தலையீட்டை அவரது தாயார் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து மேற்கொள்வோம்’ என அவர் மேலும் தெரிவித்தார்.

Previous Post

அனோஜனின் விடுதலைக்காக வளத்தாப்பிட்டியில் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் | சவூதி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை

Next Post

அனோஜன் வழக்கு | இஸ்லாமிய அமைப்புகளுக்கு றிஷாட் பதியுதீன் அனுப்பிய கடிதம் 

Next Post
அனோஜன் வழக்கு | இஸ்லாமிய அமைப்புகளுக்கு றிஷாட் பதியுதீன் அனுப்பிய கடிதம் 

அனோஜன் வழக்கு | இஸ்லாமிய அமைப்புகளுக்கு றிஷாட் பதியுதீன் அனுப்பிய கடிதம் 

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

பாடசாலைகள் மல்யுத்தம் போட்டியில் வரலாறு படைத்த யாழ். சன்மார்க்க மகா வித்தியாலய மாணவி கனிஸ்டா

பாடசாலைகள் மல்யுத்தம் போட்டியில் வரலாறு படைத்த யாழ். சன்மார்க்க மகா வித்தியாலய மாணவி கனிஸ்டா

September 21, 2026
அனோஜன் வழக்கு | இஸ்லாமிய அமைப்புகளுக்கு றிஷாட் பதியுதீன் அனுப்பிய கடிதம் 

அனோஜன் வழக்கு | இஸ்லாமிய அமைப்புகளுக்கு றிஷாட் பதியுதீன் அனுப்பிய கடிதம் 

September 21, 2026
சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனை விடுவிக்க இராஜதந்திர ரீதியில் தலையிடுங்கள்

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனை விடுவிக்க இராஜதந்திர ரீதியில் தலையிடுங்கள்

September 21, 2026
அனோஜனின் விடுதலைக்காக வளத்தாப்பிட்டியில் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் | சவூதி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை

அனோஜனின் விடுதலைக்காக வளத்தாப்பிட்டியில் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் | சவூதி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை

September 21, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures