Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Life

கனேடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் 25ஆவது வருடாந்த விருது அளிக்கும் நிகழ்வுடன் ஆட்டம், பாட்டு, கொண்ட்டாட்டம், இனிய உணவு என எல்லாம் கலந்த ஒரு கலவையாக நிகழ்சிகளை வழங்கி அனைவரையும் இன்ப வெள்ளத்தில் குதுகலிக்க வைத்தனர்.

April 24, 2016
in Life, News
0

ஸ்காபுரோ பொது வைத்தியசாலைக்கு நிதி சேகரிக்கும் முகமாக கனேடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் தொடர்ச்சியாக பல்வேறு விதமான நிதி சேர் நிகழ்வுகளை வெகுவிமர்சையாக நடத்திவருவதனை நாம் அறிவோம். அந்தவகையில் கனேடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் 25ஆவது வருடாந்த விருது அளிக்கும் நிகழ்வுடன் ஆட்டம், பாட்டு, கொண்ட்டாட்டம், இனிய உணவு என எல்லாம் கலந்த ஒரு கலவையாக நிகழ்சிகளை வழங்கி அனைவரையும் இன்ப வெள்ளத்தில் குதுகலிக்க வைத்தனர். நிகழ்ச்சி திட்டமிட்டதன் பிரகாரம் சரியாக ஆறு மணிக்கு ஆரம்பமாகியது. விருந்தினர்களை வரவேற்குமுகமாக பிரபல ஆங்கில பாடகி பாடல்களை பாட மெகா tuners இன் குழுத் தலைவர் அரவிந்தன் தலைமையில் வாத்தியங்கள் முழங்கியது. விருந்தினர்கள் புன்முறுவலுடன் உள்நுழைந்தனர். கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக கனேடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் ஸ்காபுரோ வைத்தியசாலைக்கான நிதி சேர் நடைபவனியினை நடத்தி வருகின்ற நிகழ்வினையும் நாம் இங்கு குறிப்பிடுவதில் பெருமிதம் கொள்கின்றோம். இதுவரை இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான டொலர் நிதி உதவியினை கனேடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் இந்த வைத்தியசாலைக்கு வழங்கியுள்ளதாக நாம் அறிவோம். தமிழ் மக்கள் செறிந்து வாழும் ஸ்காபுரோ பகுதியில் அதிகளவான தமிழர்கள் தமது வர்த்தக முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர். ரொரன்ரோ பெரும்பாகத்தில் இயங்கி வரும் வைத்தியசாலையில் மகப்பேற்று சிகிச்சைகள் மற்று தாய் சேய் நலன் பேணும் நடவடிக்கைகளில் சிறப்பான பங்களிப்பை ஸ்காபுரோ வதைத்தியசாலை வழங்கி வருவதாக மருத்துவ கலாநிதி கிருபா அவர்களை நேரில் சந்தித்தவேளை எனக்கு தெரிவித்தார். இதன் காரணமாக ஸ்காபுரோவிற்கு வெளியில் வாழும் மக்களும் குழந்தைபேற்றிற்கு ஸ்காபுரோ வைத்தியசாலையினை நாடி வருதாகவும் அவர் மேலும் எனக்கு தெரிவித்தார்கள். அதிகரித்து வரும் மருத்துவ தேவைகளை ஈடுசெய்வதற்கு ஏதுவாக நாம் வாழும் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளை நவீனமயப்புடுத்துவது இங்கு வாழும் அனைவரினதும் கடமையாகின்றது எனவும் சிரித்தபடி அவர்கள் எனக்கு கூறினார்கள். கனேடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் நேற்றிரவு மிகவும் வெற்றிகரமாக நடத்தி முடித்த விழாவிற்கு பெரிய ஒரு வர்த்தக உரிமையாளர் பட்டாளம் வருகைதந்து வர்த்தகர்களுக்கு இடையில் தாங்கள் ஒற்றுமையுடன்தான் செயற்பட்டுவருவதாக இந்தவிழாவின் மூலம் மீண்டும் நீருபித்தனர். Scarborough Convention Center இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. விழா ஆரம்பித்ததில் இருந்து நிறைவடையும்வரை குளிர், சூடான பானங்கள் நிகழ்சிகளை விறு விறுப்புடன் கண்டுகளிப்பதற்கு ஏற்ப நேரத்திற்கு நேரம் வழங்கப்பட்டது. மெகா tuners இன் குழுத் தலைவர் அரவிந்தன் தலைமையில் நடைபெற்ற இசை மழையில் சிறப்பான பாடல்களை பாடி மகிழ்விக்க மகதி மற்றும் ஹரிஷ் ராகவேந்திரா ஆகியோருடன் கனேடிய பாடகர்களும் இணைந்து அமுதகானமாக பாடல்களை ஒன்றன் பின் ஒன்றாக பாடி சகலரையும் ஒரு நிமிடம் கூட இருந்த இடத்தினை விட்டு அசையாமல் மகிழ்வித்தனர். அரவிந்தன் அவர்கள் தங்களது கைவிரல்களினால் மந்திரயாலங்கள் காட்ட ஏனைய இசைக்கருவிகளை வாசிப்போர் இசை முழங்க பாடகர்கள் சிறப்பான பாடல்களை அசத்தலாக பாட விருந்தினர்கள் ஒவ்வொருபாடல்களின் இறுதியிலும் கரகோஷ முழக்கம் செய்தனர். தென் இந்தியாவில் இருந்துவரும் சகல பிரபல்யமான பின்னணி பாடகர்களுக்கும் இசைவழங்க கூடிய இசைக்குழுவின் தலைவராக அரவிந்தன் அவர்கள் திகழ்ந்துவருவது ஈழத் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கின்றது. குறிப்பாக அரவிந்தன் அவர்கள் நேற்றைய நிகழ்ச்சியில் எந்தவிதமான ஒத்திகையும் இல்லாமல் பாடிய அனைத்து பாடல்களுக்கும் மிகவும் அசத்தலாக தங்களது கைவரிசையை காட்டினார்கள். மகதி மற்றும் ஹரிஷ் ராகவேந்திரா அவர்கள் இருவருமாக சேர்ந்து அரவிந்தனின் திறமையினை பார்த்து தாங்கள் பெருமைப்படுவதாகவும் குறிப்பாக எந்தவித இலத்திரனவியல் பதிவுகளின் சேர்க்கைகளும் இன்றி தனித்து கை விரல்களினால் கருவியினை கையாளுவதை பார்த்து தாங்கள் அசந்து போனதாகவும் தெரிவித்தார்கள். விசேடமாக ஒரு சில பாடல்கள் விருந்தினர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பால்கள் பாடப்பட்டவேளையில் அரவிந்தன் அவர்களும் அதற்கு தங்களது திறமையினை எவ்வித தயார்படுத்தலும் இன்றி சகல இசை கருவி வல்லூனர்களையும் ஒருங்கிணைத்து விழாவின் வெற்றிக்கு வித்திட்டார். உணவு வகைகள் மற்றும் பரிமாறிய விதம் மேற்கத்திய பாணியில் அமைந்திருந்தது. குறிப்பாக பிரதான உணவு தட்டு மற்றும் சாப்பாட்டின் பின்னரான சிற்றுண்டி வகைகள் ஆகியவற்றினை குறிப்பிடலாம். மடபம் நிறைந்த மக்கள், தொழில் அதிபர்கள் பட்டாளம், சிறப்பு விருந்தினர்கள், இனிமையான சிற்றுண்டி வகைகள், உற்சாகத்திற்கு குளிர் பானங்கள் என எல்லாம் நிறைந்த விழா என கூறுவதில் பெருமிதம் கொள்கின்றேன். விழா ஒருங்கினைப்பாளர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.

EasyNews Latestnews
easy24news.comlatest

Previous Post

மெக்சிகோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையிலிருந்து தீப்புகை வெளியாவதை குடியிருப்பாளர்கள் பார்த்து பிரமிக்கின்றனர்.

Next Post

கனடா ஈழநாடு 23ஆவது வருடாந்த பத்திரிகைத்துறை சார்ந்த விழாவினை மிகவும் விமர்சையாக இன்று கொண்டாடினார்கள். மண்டபம் நிறைந்த சங்கீத ரசிகர்களின் கூட்டம்.

Next Post

கனடா ஈழநாடு 23ஆவது வருடாந்த பத்திரிகைத்துறை சார்ந்த விழாவினை மிகவும் விமர்சையாக இன்று கொண்டாடினார்கள். மண்டபம் நிறைந்த சங்கீத ரசிகர்களின் கூட்டம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

June 19, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

காவல்துறையினர் குறித்து முறைப்பாடளிக்க புதிய முறைமை அறிமுகம்!

June 19, 2026
விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

பயிர்கடன் குறித்து முதல்வர் விடுத்த அதிரடி உத்தரவு

June 18, 2026
நிதி முறைக்கேடு வழக்கில் பசில் ராஜபக்சவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

நிதி முறைக்கேடு வழக்கில் பசில் ராஜபக்சவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

June 18, 2026

Recent News

தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

June 19, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

காவல்துறையினர் குறித்து முறைப்பாடளிக்க புதிய முறைமை அறிமுகம்!

June 19, 2026
விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

பயிர்கடன் குறித்து முதல்வர் விடுத்த அதிரடி உத்தரவு

June 18, 2026
நிதி முறைக்கேடு வழக்கில் பசில் ராஜபக்சவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

நிதி முறைக்கேடு வழக்கில் பசில் ராஜபக்சவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

June 18, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures