கனடா மிட்லன்ட் மறைசாட்சியர்களின் திருத்தலத்தில் 15,000 க்கும் அதிகமான தமிழ் மக்கள் ஒன்று கூடி திருவழிபாடுகளில் பங்கேற்றனர்!

கனடா மிட்லன்ட் மறைசாட்சியர்களின் திருத்தலத்தில் 15,000 க்கும் அதிகமான தமிழ் மக்கள் ஒன்று கூடி திருவழிபாடுகளில் பங்கேற்றனர்!

கனடாவின் தேசிய திருத்தலங்களில் ஒன்றாக விளங்கும் கனடிய மறைசாட்சியர்களின் திருத்தலம் இவ்வருடம் தனது 90வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றது.கனடா வாழ் கத்தோலிக்க தமிழ் மக்கள் கடந்த 29 ஆண்டுகளாக மிட்லன்ட் மறைசாட்சியர்களின் திருத்தலத்துக்கு திருப்பயணம் மேற்கொண்டு வருகின்றார்கள். தமிழ் மக்களின் ஆண்டுக்கான பொதுத்திருப்பயணம் ஒவ்வோர் வருடமும் ஐ_லை மாதம் 3வது சனிக்கிழமைகளில் இடம்பெறுவதற்க்கு மிட்லன்ட் திருத்தல நிர்வாகம் ஒழுங்கு செய்திருக்கின்றது. இவ்வாண்டு ஐ_லை 16ம் திகதி சனிக்கிழமை தமிழ் மக்களின் திருப்பயணம் 15க்கும் அதிகமான மக்களோடு, ஈழத்தின் வட கிழக்கு மாநிலங்களிலிருந்து யாழ் ஆயர் பேரருட்திரு யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையும், மட்டுநகர் ஆயர் பேரருட்திரு யோசப் பொன்னையா ஆண்டகை அவர்களும் கலந்து கொண்டு திருவழிபாடுகளை தலைமையேற்று 20க்கு மேற்பட்ட குருக்களோடு இணைந்து திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர்.

1987ஆம் ஆண்டு 150 இறைமக்களோடு ரோரன்ரோ தமிழ் கத்தோலிக்க சமூகத்தோடு அருட்பணி கிறிஸ்ரி யோக்கிம்பிள்ளை அடிகளாரால் ஆரம்பிக்கப்பட்ட இத்திருப்பயணம் ஆண்டுதோறும் படிப்படியாக வளர்ந்து தூய ஆரோக்கிய அன்னைப் பங்கும் இணைந்து இப்பயணம் இன்று திருத்தலத்திலே மிக அதிகமான எண்ணிக்கையில், 15,000க்கு மேற்பட்ட மக்கள் பங்கு கொள்ளும் நிகழ்வாக கணிக்கப்படுகின்றது. கத்தோலிக்க மக்கள் மட்டுமல்லாமல், கிறிஸ்தவ இந்து மக்களும் இத்திருப்பயணத்தில் கலந்து கொள்வதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை, இந்தியா நாடுகள் தவிர்த்து தமிழ் கத்தோலிக்க மக்கள் அதிகளவு எண்ணிக்கையில் ஒன்று கூடி திருவழிபாட்டில் கலந்து கொள்ளும் நிகழ்வு இது ஒன்றாகவே இருக்கும் என்று உறுதியாக கூறலாம்.
தமிழ் மக்களின் திருப்பயணம் தொடங்கி 24 ஆண்டுகளாக பேராலயத்தின் அருகிலுள்ள போலந்து நாட்டு மக்களினால் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு திருப்பீ;டத்தில் தமிழ் மக்களின் வழிபாடுகள் இடம்பெற்று வந்தன. 25வது ஆண்டு திருப்பயணத்தை சிறப்பிக்கும் முகமாக மிட்லன்ட் திருத்தல நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் திருத்தலத்தலேயே தமிழ் கத்தோலிக்க மக்களின் பாதுகாவலியாக தாயகத்தில் விளங்கும் மருதமடு அன்னைக்கு ஒரு திருப்பீடம் அமைக்க முனைந்தார்கள். தமிழ் கத்தோலிக்க மக்களின் தாராளமான கொடையோடு திருத்தல ஆலய சுற்றாடலின் சிறப்பான இடத்தில் மருதமடு அன்னைக்கு ஓர் அழகான திருப்பீடமும் 6 அடி உயரமான வெள்ளை பழிங்கு கல்லில் உருவாக்கப்பட்ட அன்னையின் திருஉருவமும் அமைக்கப்பட்டது. இத்திருப்பீடம் கிட்டத்தட்ட தாயகத்தில் மருதமடு ஆலயத்தில் ‘போட்டிக்கோ’ என அழைக்கப்படுகின்ற ஆலய முன்பக்க பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. 25வது ஆண்டு நிறைவுத் திருப்பலியும் மாலை 4 மணியளவில் நற்கருணை ஆசீர்வாதமும் இவ் மருதமடு அன்னையின் திருப்பீடத்தில் 2012ஆம் ஆண்டு ஐ_லை மாதம் 21ஆம் நாள் 14,000 மக்கள் 20க்கு மேற்பட்ட குருக்கள் பங்கு பெற்றி சிறப்பு பெற்றது.

இவ் மருதமடு அன்னையின் திருப்பீ;டத்திற்கு அருகாமையில் நமது தாயகத்தில் இயற்கை இடர்களினால் இறந்தவர்களுக்கும், நமது விடுதலைக்காக வித்தானவர்களுக்காகவும், அநியாமாக கொலை செய்யப்பட்டவர்களுக்காகவும் ஒரு நினைவுச்சின்னம் மெழுகுவர்த்தி தீபத்தோடு எரிவது போன்று எழுப்பப்பட்டுள்ளது. திருவழிபாடுகளுக்கு முன்னர் இவர்களை நினைவு கூர்ந்து, வருகை தந்த ஆயர்களும், புதிதாக மிட்லன்ட திருத்தலத்தின் முதல்வாராக பொறுப்பேற்றிருக்கும் அருட்பணி மைக்கல் நொக்ஸ் அவர்களும் இணைந்து செபமாலைப்பவனியின் இறுதியில் மலர் வலையம் சாத்தி நிலைவாழ்வு பெற்ற இவர்களுக்காக செபித்து வணக்கம் செலுத்தப்பட்டது..

மதியம் 12 மணியளவில் இரு ஆயர்களையும் மறைத்தல முதல்வரையும் தமிழ் மரபுப்படி ஆரத்தி எடுத்து மாலையணிவித்து மங்கலதிலகமிட்டு வரவேற்கப்பட்டனர். ஆயர்களே வருக! குருகுலமே வருக, இறைமக்களே வருக என்று தமிழ் இசை முழங்க அபிநாயாலய நடன மாணவிகள் அவ்விறை பாடலுக்கு நடனமாட பெருமகிழ்வுடன் திருப்பீடத்துக்கு அழைக்கப்பட்டனர். திருவழிபாடுகள் ஆரம்பமாகி இறைவார்த்தை வழிபாட்டு இறுதியில் மட்டுநகர் ஆயர் யோசப் பொன்னையா ஆண்டகை ஒரு சிறப்புமிக்க ஒரு மறையுரையை மிட்லன்ட் மறைசாட்சியர்பற்றியும், இரக்கத்தின் ஆண்டு பற்றியும் தமிழில் ஆற்றினார். தொடர்ந்து யாழ்ஆயர் பேரருட்திரு யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை இயேசுவின் அன்னை மரியா, திருமணம், குடும்பவாழ்வு பற்றி ஆங்கிலத்தில் அரிய மறையுரையை வழங்கினார். தொடர்ந்து காணிக்கைப் பவனி, திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு இறுதியில் அருள் நிறை மரியே வாழ்க எனும் மரியன்னையை புகழ்ந்து பாடும் பாடலுக்கு பக்தி வணக்கத்துடன் நடனமாடி. மறைசாட்சியர்களின் திருப்பண்டங்களை இறையாடியார்கள் முத்தி செய்யும் வாய்ப்பும் வழங்கப்பட்டது.

மிடலன்ட் மறைத்தலம் அதிக மரங்கள் நிறைந்த சோலையாகவும் பச்சை பசேலாக காட்சியளிக்குமிடமாகவும் மனதுக்கு அமைதியை தரும் சூழ்நிலையும் கொண்டதாகும். ஆயிரக்கணக்கில் மக்கள் குடும்பங்களாவும் உறவினர் நண்பர்களுடன் இம்மரங்களுக்கு கீழே இருந்து உணவுகளை பரிமாறியும் அனுபவங்களை பகிர்க்து கொண்டும் பொழுதை கழிக்கும் காட்சி தாயகத்தில் மருதமடு நினைவுகளையே கொண்டவரும்.
தொடர்ந்து மாலை 3.30 மணியளவில் மருதமடு அன்னையின் திருப்பீடத்தில் நற்கருணை எழுந்தேற்றம்; செய்யப்பட்டு செபவழிபாட்டை நோர்வேயில் இருந்து வருகை தந்த அருட்பணி றெஐpனோல்ட் அடிகள் நடாத்தி தொடர்ந்து மட்டுநகர் ஆயரினால் நற்கருணை ஆசீர் வழங்கப்பட்டது.

நாள் முழுவதும் திருத்தலத்தில் நிகழ்வுகள் அனைத்தும் அமைதியாகவும் பக்திபூர்வமாகவும் அனைவருக்கும் திருப்திதரும் வகையில் இடம்பெற்றதும் இன்னும் சிறப்பாக இரு ஆயர்கள் வழிபாடுகளை சிறப்பித்ததும் வரலாற்றின் பதிவுகளில் இடம்பெறவேண்டியதாகும்.midlmidl 1

midl 22midl 2

midl 3

midl 4

midl 5

midl 6

midl 7

midl 8

midl 9

midl 10

midl 11

midl 12

midl 13

midl 14

midl 15

midl 16

midl 17

midl 18

midl 19

midl 20

midl 21

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News