கனடாவில் ஸிகா தொற்றுக்கு உள்ளான முதலாவது கர்ப்பிணி பெண்மணி!
‘ஏடீஸ்’ எனும் நுளம்பினத்தால் இந்த ஸிகா வைரஸானது பரவி வருகின்ற நிலையில், இது கனடாவில் காணப்படவில்லை. ஆனால் குறித்த நோய் தாக்கம் அண்மையில் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள பிரதான நகரான மியாமியில் பரவியது. இந்நிலையில், மியாமிக்கு பயணிப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு கர்ப்பிணி பெண்களுக்கு கனடா பொது சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியது.
ஏடீஸ்’ எனும் நுளம்பினத்தால் பரவலடையும் இந்த ஸிகா வைரஸானது, தொற்றுக்குள்ளானவருடன் உடலுறவு கொள்வதன் மூலமும் பரவுவதாக அண்மைய ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. அந்தவகையில், கனடாவில் இதுவரை 205 ஸிகா தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.