ஒலிம்பிக் அரங்கில் புதிய மைல்கல்லை எட்டி வரலாற்று சாதனை படைத்தது அமெரிக்கா!
ஒலிம்பிக் அரங்கில் அமெரிக்கா 1000 தங்கப்பதக்கங்களை வென்று புதிய மைல்கல்லை எட்டி ஒலிம்பிக்கில் வரலாற்று சாதனை படைத்துள்ளது.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் 31வது ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. இதில் தொடர்ந்து அசத்தி வரும் அமெரிக்க வீரர்கள் பதக்க மழை பெய்து வருகின்றனர்.
பெண்களுக்கான 4×100 மீற்றர் மெட்லே தொடர் நீச்சலில் லில்லி கிங், கேத்லீன் பாகர், சிமோன் மானுல், டானா வால்மெர் ஆகியோர் அடங்கிய அமெரிக்க அணி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. ஒலிம்பிக் வரலாற்றில் அமெரிக்காவின் 1000வது தங்கப்பதக்கமாக இது அமைந்தது.
இது வரை 24 தங்கம், 18 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தமாக 61 பதக்கங்களை குவித்துள்ள அமெரிக்க அணி, தொடர்ந்து பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
இதுவரை நடந்துள்ள 31 ஒலிம்பிக் போட்டிகளில், அமெரிக்க அணி மொத்தமாக 1000 தங்கம், 763 வெள்ளி, 674 வெண்கலம் என 2437 பதக்கங்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.