ஒன்ராறியோ தெற்கு பகுதியில் அமைந்துள்ள வைத்தியசாலை ஒன்று உலக ransomware சைபர் தாக்குதலிற்கு உள்ளாகியுள்ளது. ஒசாவாவில் அமைந்துள்ள லேக்றிட்ஜ் சுகாதார நிலையம் வெள்ளிக்கிழமை கணனி பிரச்சனைகளை எதிர்நோக்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாக்கம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற உலகளாவிய சைபர்-தாக்கத்துடன் தொடர்புடையதெனவும் கூறப்பட்டுள்ளது.
பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.வைத்தியசாலையின் வைரஸ் தடுப்பு அமைப்புக்கள் வைரசை முடக்கி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நோயாளிகள் பராமரிப்பு பாதிக்கப்படவில்லை.
WannaCry எனப்படும் இத்தீம்பொருள், யு.எஸ்.தேசிய பாதுகாப்பு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இணைய உளவு கருவி இந்த வருடம் டிரம்ப்-எதிர்ப்பு ஹக்கர்களினால் கசியவிடப்பட்டதென தெரியவந்துள்ளது.
கனடாவின் உயர் தொழில்நுட்ப மையமான வார்ட்டலூ, ஒன்ராறியோவிலும் இந்தWannaCry தோற்றம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. தொடர்மாடி குடியிருப்பு கட்டிடமொன்றின் வரவேற்பு கூடத்தில் உள்ள கணனியில் தோன்றியுள்ளது.
மத்திய அரசாங்க கணனிகள் தாக்கப்படவில்லை என கனடாவின் தகவல் தொடர்பு பாதுகாப்பு நிறுவனர் உளவு துறை முகமை தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை இரவு இரண்டாவது சுற்று அலை தாக்குதல் ஆரம்பித்துள்ளது.
இதனை தொடர்ந்து பாதுகாப்பு வல்லுநர்கள் கோப்புக்களை காப்பு நகல்கள் எடுத்து வைத்தல், அறிமுகமற்ற இணைப்புக்களை கிளிக் செய்தலை தவிர்த்தல், கணனி மென்பொருளை தொடர்ந்து புதுப்பித்தல் போன்றனவற்றை செய்து உங்கள் கணனிகளை பாதுகாத்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய யூனியன், பிரிட்டன், ஜேர்மனி, ரஷ்யா, யு.எஸ்,. துருக்கி, பிரான்ஸ், பிரேசில், ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.