Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஐ.நா. தீர்மானம் வீட்டோ மூலம் நிராகரித்தது அமெரிக்கா

December 20, 2017
in News, Politics, World
0

மத்திய கிழக்கு பகுதியில் உள்ள முக்கிய நகரம் ஜெருசலேம். 1967ம் ஆண்டு நடந்த போரில் இந்த நகரை ஜோர்டான் கைப்பற்றியது. இந்நகரின் கிழக்கு பகுதியை இஸ்ரேல் கைப்பற்றியது.

ஜெருசலேம் நகரை தங்கள் நாட்டின் தலைநகர் என இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகள் உரிமை கொண்டாடி வருகின்றன. இந்த சர்ச்சையால் இஸ்ரேலில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள் எல்லாம் டெல் அவிவ் நகரில் உள்ளன.

இந்நிலையில் ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாகவும், அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேம் நகருக்கு மாற்றவும் அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். இந்த அங்கீகாரத்தை திரும்ப பெறக் கோரும் ஒரு பக்க வரைவு தீர்மானத்தை, ஐ.நா.வில் எகிப்து கொண்டு வந்தது.

அதில் ‘‘ஜெருசலேம் மீதான இஸ்ரேலின் உரிமையை நிராகரத்து 50 ஆண்டுகளுக்கு முன்பே கொண்டு வரப்பட்ட பல தீர்மானங்களை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அங்கீகரித்துள்ளது.

அமெரிக்காவின் பல ஆண்டு கொள்கைகளுக்கு எதிராகவும், உலகின் மிக சிக்கலான பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சிக்கு அச்சுறுத்தலாகவும் அதிபர் டிரம்ப் அறிவிப்பு உள்ளது.

எனவே இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலம் நகரை அங்கீகரிக்கும் அறிவிப்பை அதிபர் டிரம்ப் திரும்ப பெற வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. வீட்டோ மூலம் நிராகரிப்பு: ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் இந்த வரைவு தீர்மானத்தை வீட்டோ அதிகாரம் உள்ள அமெரிக்கா நிராகரித்துள்ளது.

பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி நிராகரித்தது கடந்த 6 ஆண்டுகளில் இதுவே முதல் முறை.

இதுகுறித்து ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே கூறுகையில், ‘‘அமெரிக்காவின் இறையாண்மையை பாதுகாக்கவும், மத்திய கிழக்கு பகுதியில் அமைதி முயற்சியில் அமெரிக்காவின் பங்கை பாதுகாக்கவும் டிரம்ப் நிர்வாகம் முதல் முறையாக வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளது.

நாங்கள் எங்கு தூதரகத்தை அமைக்க வேண்டும் என அமெரிக்காவுக்கு எந்த நாடும் கூற முடியாது’’ என்றார்.

Previous Post

முதன்முறையாக லண்டன் பிஷப்பாக பெண் நியமனம்!

Next Post

பாக்., சிறைகளில் 500 இந்தியர்கள்

Next Post
பாக்., சிறைகளில் 500 இந்தியர்கள்

பாக்., சிறைகளில் 500 இந்தியர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

June 20, 2026
செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

June 20, 2026
ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

June 19, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

June 19, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures