Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஏப்ரல் விடுமுறைக்கு பின் ஆசிரியர் வெற்றிடங்களுக்கான நியமனம் – சுசில்

April 1, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இவ்வாண்டுக்கான தேசிய பரீட்சைகள் மீண்டும் ஒத்திவைப்பு | கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த

மேல் மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட பரீட்சையில் சித்தியடைந்த அனைவருக்கும் ஏப்ரல் விடுமுறைக்கு பின்னர் நியமனம் வழங்க நடவடிக்கை எடுப்போம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (1)  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசேட கூற்றொன்றை முன்வைத்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு  தெரிவித்தார்.

சஜித் பிரேமதாச குறிப்பிடுகையில்,

மேல்மாகாணத்தில் 5,000க்கும் மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவும் நிலையில், 2,300 தகுதி வாய்ந்த பரீட்சார்த்திகள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் 2700 வெற்றிடங்கள் நிலவுகின்றன. மொத்தம் 5453 வெற்றிடங்கள் காணப்படுவதால், எஞ்சிய ஆட்சேர்ப்புகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும்.

அதேபோன்று நாட்டில் 40ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகள் இருக்கின்றனர்.தொழில் இல்லாமல் வீதியில் இருக்கும் இந்த பட்டதாரிகள் தொடர்பில் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் என்ன? இவர்கள் தொடர்பில் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில்,

மேல் மாகாணத்தில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு பரீட்சை நடத்தி, பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையிலும் ஆசிரியர் வகையின் அடிப்படையிலுமே ஆரம்பகட்டமாக 2400 ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.

பரீட்சையில் சித்தியடைந்த ஏனையவர்கள் தொடர்பில் இந்த நாட்களில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஏப்ரல் விடுமுறைக்கு பின்னர் அவர்களுக்கும் நியமனம் வழங்க முடியும் என நம்புகிறேன்.

அதேநேரம் விஞ்ஞானம். கணிதம். தொழிநுட்பம், ஆங்கில பாடங்களுக்கு 2700 பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்காக  பரீட்சை நடத்தி முடித்திருக்கிறோம்.

இந்த வாரத்துக்குள் அவர்களுக்கு அதன் பெறுபேறுகளை வெளியிட இருக்கிறோம். அவர்களுக்கு கல்வி அமைச்சின் கீழ் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு நியமனம் வழங்க நடவடிக்கை எடுப்போம்.  

இதற்கு மேலதிகமாக நீதிமன்ற உத்தரவு தற்போது நீக்கப்பட்டுள்ளதால 13ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு  9 மாகாணங்களிலும் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு தற்போது நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. எஞ்சிய பட்டதாரிகள் தொடர்பில் அரசாங்கம் விரைவாக அவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்போம் என்றார்.

Previous Post

புத்தாண்டில் மகிழ்ச்சி தகவல் : குறைவடையப்போகும் முட்டை விலை

Next Post

காதில்  ஹியர்போன் அணிந்தவாறு சென்ற பல்கலை மாணவன் ரயிலால் மோதப்பட்டு உயிரிழப்பு!

Next Post
தம்பிலுவில் மாணவனின் மரணம் மன ரணத்தை ஏற்படுத்துகின்றது – ஸ்ரீநேசன் அனுதாபம்

காதில்  ஹியர்போன் அணிந்தவாறு சென்ற பல்கலை மாணவன் ரயிலால் மோதப்பட்டு உயிரிழப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கான் சிட்டி – திரைப்பட விமர்சனம்

கான் சிட்டி – திரைப்பட விமர்சனம்

June 29, 2026
கடைசி  குழுநிலை போட்டிகளில் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனா, இங்கிலாந்து, குரோஷியா, கொங்கோ வெற்றி

கடைசி  குழுநிலை போட்டிகளில் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனா, இங்கிலாந்து, குரோஷியா, கொங்கோ வெற்றி

June 28, 2026
வவுனியாவில் வீடு இன்றி தவித்த முன்னாள் போராளி குடும்பத்திற்கு புதிய வீடு 

வவுனியாவில் வீடு இன்றி தவித்த முன்னாள் போராளி குடும்பத்திற்கு புதிய வீடு 

June 28, 2026
காணிகளை விடுவிக்க வலியுறுத்தி ஐந்தாவதுநாளாக கேப்பாப்புலவு மக்கள் போராட்டம் ; ரவிகரன் எம்.பியும் பங்கேற்பு

காணிகளை விடுவிக்க வலியுறுத்தி ஐந்தாவதுநாளாக கேப்பாப்புலவு மக்கள் போராட்டம் ; ரவிகரன் எம்.பியும் பங்கேற்பு

June 28, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures