Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எதிர்கால இருப்பிற்காக மைத்திரிபால ராஜபக்ஷக்களிடம் அடி பணிந்தார்

March 14, 2020
in News, Politics, World
0

தனது எதிர்கால இருப்பிற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ராஜபக்ஷக்களிடம் அடி பணிவது அவரது தனிப்பட்ட விருப்பமாகும் எனத் தெரிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, இவ்வாறான செயற்பாடுகளினால் சுதந்திரக் கட்சியே பலவீனமடையும் என்றும் கூறினார்.

அத்துடன் பெருமைக் கொண்ட சுதந்திர கட்சி இன்று அரசியல் நோக்கங்களினால் வீழ்ச்சியடைந்துள்ளது. இன்றும் சுதந்திர கட்சிக்கு விசுவாசமாகவே உள்ளேன். ஆனால் மைத்திரிபால சிறிசேன தலைமையில் தொடர்ந்து பயணிக்க முடியாது என்பதற்காகவே நவ லங்கா சுதந்திர முன்னணியை ஸ்தாபித்தோம்.

2015 ஆம் ஆண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து புறக் கணிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார். இன்று அவரது விசுவாசிகள் என்று குறிப்பிட்டுக் கொள்பவர்கள் எவரும் அன்று அவருடன் ஒன்றினையவில்லை.மஹிந்த சுழக பேரணியினை ஆரம்பித்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு வழிவிதித்தோம். அரசியல் ரீதியில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்த்தேன் ஆனால் நோக்கம் வெற்றிப்பெறவில்லை.

சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன 2015ம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கு எடுத்த தீர்மானத்தை எதிர்த்து செயற்குழுவில் இருந்து வெளியேறினேன். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் உருவாக்கப்பட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியில் குடும்ப ஆதிக்கம் நிலவியதால் அக்கட்சியில் இணைந்துக் கொள்ளவில்லை.

அரசியலமைப்பிற்கு முரணாக 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து மஹிந்த ராஜபக்ஷ முறைக்கேடான விதத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்.

52 நாட்கள் அரசியல் நெருக்கடி ஏற்படுவதற்கு சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவே மூல காரணம் இவ்விருவரின் முறையற்ற செயற்பாட்டை கடுமையாகவும், பகிரங்கமாகவும் விமர்சித்தேன்.

2015 ஆம் ஆண்டு மக்கள் அரசியல் ரீதியில் செய்த தவறை 2019 ஆம் ஆண்டு திருத்திக் கொள்வார்கள் என்று எதிர்பார்த்தேன் ஆனால் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை.

ஆனால் தற்போது ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய மக்கள் பல விடயங்களை புரிந்துக் கொண்டுள்ளார்கள். எமது நாட்டை பொறுத்தவரையில்அரச தலைவராக தெரிவு செய்யப்படுபவர் ஒரு அரசியல்வாதியாக இருக்க வேண்டும். ஏன் குறைந்தபட்சம் உள்ளுராட்சி மன்ற சபை உறுப்பினராகவாவது செயற்பட்டிருக்க வேண்டும்.

அரச சேவையில் இருந்து அரச ஊழியர்கள் 60 வயதிற்கு பிறகு ஓய்வு பெறுகின்றார்கள். ஆனால் அரசியல்வாதிகள் மாத்திரம் ஆயுள் முழுவதும் எவ்விதத்திலாவது அரசியலில் செல்வாக்கு செலுத்த முயற்சிக்கின்றார்கள்.இந்நிலமை மாற்றியமைக்கப்பட வேண்டும். இதன் காரணமாகவே ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஒப்பந்த அடிப்படையில் இணைந்துக் கொண்டுள்ளேன்.

பொதுத்தேர்தலை தொடர்ந்து ஜனநாயகத்தை மதிக்கும் பலமான அரசாங்கம் தோற்றம் பெற வேண்டும்என்பது பிரதான எதிர்பார்ப்பாகும் அதற்காக ஒன்றிணைந்து செயற்படுவோம் என்றார்.

Previous Post

கொரோனாவினால் யுத்த காலத்தையும்விட, அதிக பாதிப்பு வரலாம்

Next Post

நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவியதற்கு காரணம் இதுவே!

Next Post

நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவியதற்கு காரணம் இதுவே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

2028 ரி20 மகளிர் உலகக் கிண்ணத்தில் விளையாட இலங்கை தகுதி

2028 ரி20 மகளிர் உலகக் கிண்ணத்தில் விளையாட இலங்கை தகுதி

June 27, 2026
முல்லைத்தீவு ஏம்பல் குளத்து நீரில் மூழ்கும் தட்டாமலை – ஒட்டுசுட்டானை இணைக்கும் வீதி ; சீரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

முல்லைத்தீவு ஏம்பல் குளத்து நீரில் மூழ்கும் தட்டாமலை – ஒட்டுசுட்டானை இணைக்கும் வீதி ; சீரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

June 27, 2026
யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்

12 மில்லியனுக்கும் அதிகமானோர் ‘ரின்’ இலக்கங்களை பெற்றுள்ளனர் ; 5 மில்லியன் பேர் காத்திருப்பதாக பிரதி அமைச்சர் நிஷாந்த தெரிவிப்பு

June 27, 2026
ஆயிரம் தொல்பொருள் தளங்களை பாதுகாப்பதற்கு விசேட திட்டம்

ஆயிரம் தொல்பொருள் தளங்களை பாதுகாப்பதற்கு விசேட திட்டம்

June 27, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures