Sunday, August 3, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Life

எச்சரிக்கை: கண்கலங்காமல் மனதை உலுக்கும் இந்த உண்மை சம்பவத்தை படிக்கமுடியாது!

January 30, 2017
in Life, News
0
எச்சரிக்கை: கண்கலங்காமல் மனதை உலுக்கும் இந்த உண்மை சம்பவத்தை படிக்கமுடியாது!
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter
 எச்சரிக்கை: கண்கலங்காமல் மனதை உலுக்கும் இந்த உண்மை சம்பவத்தை படிக்கமுடியாது!

நெஞ்சை தொட்ட ஓர் உண்மை சம்பவம்.. பெரிய கதை தான், பொறுமையாக படிக்கவும்.

ஒரு பெண் தனது ஒரேயொரு மகனுடன் வாழ்ந்து வந்தாள். அவளுக்கு ஒரு கண் இல்லை. அவள் கணவன் திடிரென ஒரு நாள் இறந்து விட்டார். கணவரின் இறப்பிற்கு பின்பு அவளது வாழ்வின் ஒவ்வொரு நொடியும் தன் மகனின் எதிர்கால வாழ்வை குறித்த சிந்தனையாகவே இருந்தது.

தன்னிடம் இருந்த சொத்துக்களில் ஒரு பகுதியை விற்று மகனை ஒரு நல்ல பள்ளியில் சேர்த்தாள். மீதி சொத்தை தனது மகனின் கல்வி தொடர்பான செலவுகளுக்கு தயார் செய்திருந்தாள்.

நல்ல ஒழுக்கமிக்க மகன் இரக்கமானவன், புத்திசாலி ஊரில் எல்லோரும் புகழும் வண்ணம் அவன் செயற்பாடுகள் இருந்தன. பரிட்சையில் முதல் தரத்தில் தேறினான்.

இந்த செய்தியை அறிந்த உடனேயே அந்த தாய் ஆவலுடன் பாடசாலை நோக்கி ஓடினாள் மகனின் வகுப்பறை எது என அறிந்து அங்கு சென்று அவனை வாரி அணைத்து முத்தமிட்டாள்.

இறைவனை புகழ்ந்தாள் சந்தோஷத்துடன் வீடு வந்து அவனுக்கு பிடித்தமான உணவை தயாரிக்க ஆரம்பித்தாள். மகனின் வருகையை எதிர்பார்த்து வழி மேல் விழி வைத்து காத்திருந்தாள் மகன் வந்தவுடன் வாஞ்சையுடன் அருகில் சென்றாள். ஆனால் மகன் முகத்தை திருப்பி கொண்டான்.

தாயுடன் பேசவில்லை. நேராக அறைக்குள் சென்று படுத்து விட்டான். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. பதற்றத்துடன் ஓடிச்சென்று என்னவென்றாள் கவலையுடன்.

மகன் சொன்னான், ” நீ ஏன் என் பள்ளிக்கு வந்தாய்?. அங்கு அழகான பணக்காரர்கள் மட்டுமே வருவார்கள். நீயோ குருடி. என் நண்பர்கள் என்னை குருடியின் மகன் என கூப்பிடுகின்றனர். இது பெரிய அவமானம். வெட்கம். இதன் பின்னர் நீ என் பள்ளிகூடம் பக்கமே வராதே” என கத்தினான் கோபமாக.

அதிர்ந்து போனாள் தாய். ஆனாலும் மகனின் சந்தோஷம் கருதி இனி அவ்வாறு நடக்காது என சத்தியம் செய்தாள்.

இப்போது அவனது சுபாவம் மேலும் மாறுபட ஆரம்பித்தது. தன்னை தேடி வரும் நண்பர்கள் முன் வர வேண்டாம் என தாயை எச்சரித்தான். அவள் கண்கலங்க சரி என்றாள்.

பின்னர் சில நாட்கள் சென்ற பின், தனக்கு குருடியுடன் இருப்பது வெட்கம் என்றும், தான் ஹாஸ்டலில் தங்கி படிப்பதாக சொன்னான். ஒரு நாள் வீட்டை விட்டே சென்று விட்டான். அவள் கதறி துடித்தாள், தினமும் தன் மகனை நினைத்து. இறுதி பரீட்சையில் தேர்ச்சி பெற்று மருத்துவ கல்லூரிக்கு மகன் தேர்வானது அவளுக்கு தெரியவந்தது.

தலைநகர் சென்று படிக்க வேண்டும். நிறைய செலவாகும். தனது மீதமிருந்த அனைத்து சொத்துக்களையும் விற்று மகனுக்கு கொடுத்து அனுப்பினாள். 5 வருடம் பறந்து சென்றன. இப்போது அவளது மகன் ஒரு டாக்டர். அவனை பார்க்க ஆசையாய் இருந்தால் பல முறை முயற்ச்சி செய்தும் அவனனை பார்க்க முடியவில்லை அவன் அனுமதிக்கவும் இல்லை. ஒரு கடிதம் மகனிடம் இருந்து வந்தது.

அதில், அம்மா நான் இப்போது இந்த நாட்டில் உள்ள சிறந்த டாக்டர்களில் ஒருவன். எனக்கும் ஒரு செல்வந்தரின் மகளுக்கும் திருமணம் நடக்க உள்ளது. அவளும் ஒரு டாக்டர். உன்னை போல் குருடியின் மகன் டாக்டர் என தெரிந்தால் என் திருமணமும், கௌரவம் பாதிப்படையும்.

ஆதலால் நான் இந்த நாட்டை விட்டும் உன் பார்வையை விட்டும் கண்காணாத தேசம் செல்கிறேன்”. இது தான் அந்த கடிதத்தின் வரிகள். துடித்து போனாள் தாய்.

சில வருடங்கள் கடந்தன. முதுமையும், வறுமையும், அவளது ஒற்றை கண்ணுமே அவளிடம் எஞ்சியிருந்த சொத்துக்கள். பசி கொடுமையின் காரணமாக ஒரு பணக்கார வீட்டில் ஆயாவாக தினமும் வேலை செய்து வந்தாள் அந்த தாய்.

அந்த வீட்டின் எஜமானி இளவயதுடையவள். நல்ல இளகிய குணம் படைத்தவள். இறைபக்திமிக்கவள். அவளும் ஒரு மருத்துவராகவே இருந்தாள். இந்த தாயை தனது தாயாக நேசித்து போதித்து வந்தாள். எல்லாம் நன்றாகவே நடந்தன. அவளது கணவன் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்தான்.

தனது எஜமானியின் கணவர் வருகிறார் என்பதனால் வாய்க்கு ருசியாக நல்ல உணவுகளை தயார்படுத்தி வைத்திருந்தாள் அந்த குருட்டுத் தாய். வீடு வந்த அவளது கணவன், சிலநாழிகைகளின் பின்னர் சாப்பிட அமர்ந்தான். உணவை ஆசையாக வாயில் அள்ளி திணித்தான். திடீரென அவன் முகம் மாறியது. கருமை அவன் முகத்தில் சூழ்ந்து கொண்டது. சடாரென தனது மனைவியின் முகத்தை பார்த்து கேட்டான், “இதனை நீ தான் சமைத்தாயா?” என்று.

மனைவி குழப்பத்துடன் இல்லையே என்றாள். “அப்படியானால் யார் சமைத்தது” இது அவனது இரண்டாம் கேள்வி. வீட்டு வேலைக்காரி சமைத்தாள் என்றாள் மனைவி. உடன் எழுந்த அவன் அடுப்படிக்கு சென்று எட்டி பார்த்தான். உள்ளே அவனது குருட்டு தாய். அதிர்ந்து போனார்கள் இருவரும். இவள் இன்னும் இங்கேயா இருக்கிறாள் எனும் ஆத்திரமும், வெறுப்பும் அவன் மூளையை ஆட்டுவித்தது. என் மருமகளா என் எஜமானி என்ற சந்தோஷமும், மகிழ்ச்சியும் அந்த தாயின் இதயத்தை நிரப்பின. உணர்ச்சிகளால் இருவருமே பேசவில்லை.

மீண்டும் சாப்பாட்டு அறைக்கு வந்த மகன் சொன்னான் தன் மனைவியை பார்த்து, “இந்த குருடியை உடனடியாக கொண்டு சென்று வேறு எங்காவது கண்காணாத இடத்தில் விட்டு விடு.”என கத்தினான்.

அவன் போட்ட சத்தம் அடுப்படியில் நின்ற அந்த அபலை தாயின் இதயத்தில் முட்டி மோதி நின்றது. துவண்டு போனாள். வாழ்க்கையை இதற்கு பிறகும் வாழ வேண்டுமா? என எண்ணி கதறி அழுதாள்.

தனது கணவனின் பிடிவாதமும், கோபமும், ஆவேசமும் எல்லை மீறி செல்லவே அவனது மனைவியான அந்த பெண்(மருமகள்) வேறு வழியின்றி அத்தாயிற்கு போதுமான பணத்தினை வழங்கி பல நூறு கிலோ மீட்டர் தூரத்தில் முன்பு அவள் வாழ்ந்து வந்த இடத்திற்கே மீண்டும் அனுப்பி வைத்தாள் அழுகையுடன்.

காலம் மீண்டும் வேகமாக ஓடியது இப்போது அந்த மருத்துவனின் தலை மயிர்கள் பழுக்க ஆரம்பித்து விட்டன. உடல் பலம் சற்று சோர்ந்தும் போய்விட்டது. கணவனின் தொடரான சுயநலன், நன்றி மறத்தல் போன்ற காரணங்களினால் கருத்து மோதல் ஏற்பட்டு அந்த மருத்துவனின் மனைவியும் இவரை விவாகரத்து செய்து விட்டு இன்னாரு மறுமணம் புரிந்து கொண்டாள்.

இப்போது வைத்தியரிடம் பணத்தை தவிர வேறு எதுவும் இருக்கவில்லை. தனி மரமாக, எதிர்காலங்கள் சூனியமான சூழ்நிலையில், ஆறுதலுக்கு கூட தலை வருட யாரும் இன்றி தனி மரமாக நின்றான்.

மெல்ல மெல்ல தான் தன் தாயிற்கு செய்த துரோகங்கள், அநியாயங்கள், நோகடிப்புக்கள் அவன் உள்ளத்ததை உலுக்க ஆரம்பித்தன.

ஒரு முறை நடுநிசியில் எழும்பி அம்மா என கத்தி ஓவென அழும் அளவிற்கு அவனுக்கு தனது பாவங்களின் பாரம் புரிந்து போனது.

ஒரு நாள் காலை அவன் தொலைபேசிக்கு ஒரு செய்தி வந்தது. அவனது தூரத்து உறவினர் ஒருவர் பேசினார். “உன் தாய் தள்ளாத வயதில் மரணிக்கும் தறுவாயில் இருக்கிறாள்” என்பதே அந்த செய்தி.

உடனடியாகவே அவன் தனது காரில் கிளம்பி தாயிருக்கம் இடத்திற்கு சென்றான். அவன் சென்ற போது, அவளது உயிர் பிரிந்து விட்டது. உயிர் போன நிலையில் அவளை கட்டிலில் கிடத்தி வைத்திருந்தனர். இப்போது “அம்மா” என கதறி அழதான். கண்ணீர் விட்டான். தனது தாயின் உயிரற்ற உடலை நல்ல முறையில் அடக்கம் செய்ய உதவினான்.

இப்போது ஒரு கடிதத்தை அவனது உறவுக்காரர் கொடுத்தார். தான் மறைந்த பின்னர், மகன் வருவதாக இருந்தால் மட்டும் இக்கடிதத்தை கொடுக்குமாறும், இல்லையெனில் எரித்து விடுமாறும் தயார் கடைசி தருவாயில் வேண்டிக்கொண்டதாகவும் அவர் சொன்னார். பிரித்து படித்தான்.

அவன் கண்களில் இருந்த வழிந்த கண்ணீர் அந்த பாலைவனத்தையே சகதியாக மாற்றியது.

அதில் இருந்த வரிகள் இதுதான்…. “அன்பின் மகனே!..

எனக்கு தெரியும், என் உருவத்தை பார்ப்பது உனக்கு ஒரு போதும் பிடிக்காது என்று. அதனாலேயே, எனது மரணத்திற்கு பின்னர் நீ வந்தால் மட்டும் இதனை கொடுக்கும்படி சொன்னேன். மற்றபடி உன்மீது எனது அன்பு என்றும் மாறாதது. அது இறைவனுக்கு மட்டுமே தெரிந்த விஷயம். மகனே நான் குருடிதான். உனக்கு குருடி தாய் இருந்திருக்க கூடாது தான். எனக்கு உன் உள்ளம் புரிகிறது. உனது உள்ளத்து உணர்வுகளை நான் பெரிதும் மதிக்கின்றேன்.

நான் உன்னை சபித்தது கிடையாது. ஏன் கோபப்பட்டது கூட கிடையாது. எனக்கு ஒரு வாழ்க்கை வேண்டும் என்றிருந்தால் நான் இன்னொரு திருமணம் முடித்து நன்றாக வாழ்ந்திருப்பேன்.! ஆனால் உனக்காகவே நான் வாழ்ந்தேன். அதை நீ புரிந்து கொள்ளாமல் போய் விட்டாய்! மகனே உனக்கு தெரியுமா? நான் ஏன் குருடியானேன் என்று!

அப்போது உனக்கு சிறு வயது.சாலையில் நின்று நீ விளையாடிக் கொண்டிருந்தாய். ஏதோ ஒரு பொருள் உன் கண்களில்பட்டு உன் ஒரு கண் குருடாகி விட்டது.பார்க்காத மருத்துவர்கள் இல்லை.

இறுதியாக மருத்துவர்கள் இன்னொருவர் கண் இருந்தால் மட்டுமே உன் பார்வையை மீண்டும் கிடைக்க வைக்கலாம் என்றனர். என்ன செய்வதென்று எனக்கு தெரியவில்லை. நேரமும் போதாது. அதனால்…. என் ஒரு கண்ணை உடனடியகாவே தானம் செய்து உனக்கு பார்வை கிடைக்கசெய்தேன்.

எனது கண்மணியே என்னுடைய குருட்டு கண்ணே இன்று உன் கண்களாக இருக்கிறது. நீ இந்த உலகத்தை, வாழ்க்கையை பார்ப்பதும் அந்த கண்களாளேயே!… உனக்கு இதுவும் அவமானம் என்று உனது வலது கண்ணை பிடுங்கி எறிந்து விடாதே அதை அப்படியே விட்டு விடு. ஏனென்றால் அந்த கண்களால் தான் நான் உன்னை பார்த்துக் கொண்டிருப்பேன் என் அன்பு மகனே

இப்படிக்கு,
என்றுமே அன்புள்ள,
உன் அம்மா….

இதை படித்த அந்த டாக்டர் மகன் உருண்டு புரண்டு அழுதானாம்..

என் கண்கள் கலங்கின. உங்கள் கண்கள் கலங்கியிருந்தால் மற்றவர்கள் தாயின் அருமையை உணர்ந்து கொள்ள பகிரவும்.

– See more at: http://www.manithan.com/news/20170128124623?ref=cineulagam#sthash.CSjq99xB.dpuf

Tags: Featured
Previous Post

தோல் புற்றுநோயை துல்லியமாகக் கண்டறியும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்!

Next Post

வடக்கில் புலனாய்வு பிரிவினரின் நடவடிக்கைகள் தீவிரம்

Next Post
வடக்கில் புலனாய்வு பிரிவினரின் நடவடிக்கைகள் தீவிரம்

வடக்கில் புலனாய்வு பிரிவினரின் நடவடிக்கைகள் தீவிரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

போகி – திரைப்பட விமர்சனம்

போகி – திரைப்பட விமர்சனம்

August 3, 2025
அக்யூஸ்ட் – திரைப்பட விமர்சனம்

அக்யூஸ்ட் – திரைப்பட விமர்சனம்

August 2, 2025
சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ‘கூலி ‘ தணிக்கை சான்றிதழ் சிக்கல்

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ‘கூலி ‘ தணிக்கை சான்றிதழ் சிக்கல்

August 2, 2025
சம்பூரில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு | மனித உரிமைகளுக்கான மையம் நேரில் ஆய்வு

திருகோணமலை சம்பூர் கடற்கரையில் மனித எச்சங்கள் : மூதூர் நீதிமன்ற நீதிபதி கள விஜயம்

August 2, 2025

Recent News

போகி – திரைப்பட விமர்சனம்

போகி – திரைப்பட விமர்சனம்

August 3, 2025
அக்யூஸ்ட் – திரைப்பட விமர்சனம்

அக்யூஸ்ட் – திரைப்பட விமர்சனம்

August 2, 2025
சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ‘கூலி ‘ தணிக்கை சான்றிதழ் சிக்கல்

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ‘கூலி ‘ தணிக்கை சான்றிதழ் சிக்கல்

August 2, 2025
சம்பூரில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு | மனித உரிமைகளுக்கான மையம் நேரில் ஆய்வு

திருகோணமலை சம்பூர் கடற்கரையில் மனித எச்சங்கள் : மூதூர் நீதிமன்ற நீதிபதி கள விஜயம்

August 2, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures