Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஊடகக் கற்கைகள், தனித் துறையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது

April 18, 2019
in News, Politics, World
0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் பட்டப்பபடிப்பு அலகாக இயங்கி வந்த ஊடகக் கற்கைகள், தனித் துறையாக உயர்கல்வி அமைச்சினால் தரமுயர்த்தப்பட்டுள்ளது.

ஊடகக் கற்கைகள் துறையானது, ஆங்கில மொழி கற்;பித்தல் துறையுடன் இணைந்து தரமுயர்த்தப்பட்டிருக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலானது, கடந்த மாதம் 27ஆம் திகதி நகரத் திட்டமிடல், நீர் விநியோகம் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் உத்தியோகபூர்வமாக விடுக்கப்பட்டிருந்தது.

இதன்படி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப் பீடத்தின் கீழ் 17ஆவது புதிய துறையாக ஆங்கில மொழி கற்பித்தல் துறையும், 18ஆவது துறையாக ஊடகக் கற்கைகள் துறையும் உள்வாங்கப்பட்டுள்ளன.

ஊடகக் கற்கைகள் துறையின் இணைப்பாளராக கலாநிதி. சி. ரகுராமும் அவருடன் இணைந்து மூன்று நிரந்தர விரிவுரையாளர்களும் தற்போது அங்கு பணியாற்றி வருகின்றனர்.

இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ்மொழியில் ஊடகக் கற்கைகளை இத்துறையே வழங்கி வருவதும், ஊடகக் கற்கைகளில் பட்டப்படிப்பு மாத்திரமல்லாது ஊடகத்துறையில் முதுதத்துவமாணி, கலாநிதிப் பட்ட ஆய்வுகளுக்கும் யாழ். பல்கலைக்கழக பட்டப்படிப்புக்கள் பீடத்தின் வழியாக தற்போது வாய்ப்புக்கள் வழங்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பட்டப்படிப்பைத் தொடரும் மாணவர்களுக்கு ஊடகக் கற்கைகளில் தொழில்சார் பயிற்சிகள,; கொழும்பை மையமாகக் கொண்ட தேசிய ஊடக நிறுவனங்களிலும் யாழ்ப்பாணத்திலுள்ள முன்னணி ஊடக நிறுவனங்களிலும் வழங்கப்பட்டு வருவதானது ஓர் முன்னுதாரணமான செயற்பாடாக ஊடகத்துறை சார் நிபுணர்களால் பாராட்டுப் பெற்றுள்ளமையும் இங்கு கவனிக்கத்தக்கது.

Previous Post

அத்துமீறிய குடியேற்றத்திற்கு கிளிநொச்சி நீதிமன்றம் தடை உத்தரவு

Next Post

கஞ்ஜிபான இம்ரானிடமிருந்து வெளியாகும் தகவல்களுக்கு மேலிட அழுத்தம்

Next Post

கஞ்ஜிபான இம்ரானிடமிருந்து வெளியாகும் தகவல்களுக்கு மேலிட அழுத்தம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures