Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டால் துப்பாக்கியை தூக்குவேன்

January 23, 2019
in News, Politics, World
0

தனக்கோ தனது குடும்பத்துக்கோ குண்டர்களால் உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டால் தனது துப்பாக்கியை பயன்படுத்த தயங்கப் போவதில்லை என ஐ. ம. சு. மு பாராளுமன்ற உறுப்பினர் சுசந்த புஞ்சிநிலமே நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன் வைத்து உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நான் திருகோணமலை மாவட்டத்தில் சேவையாற்றி வருகிறேன். அங்கு தமிழ்,முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் எனக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது. ஆனால் சிங்களவர் வாழும் இடத்திலேயே அண்மையில் எனக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டது. நான் அங்கு பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் பல இடங்களில் மக்களுக்கு உதவி வழங்கிக் கொண்டிருந்தேன். அங்கு வந்த ஒருவர் என்னை அரிவாளால் வெட்ட முயன்றார்.

இவரை எனது பாதுகாப்பு அதிகாரி தடுத்தார். அவர் ஒரு கஞ்சா வியாபாரி. அவருக்கு எதிராக யாரும் செயற்படுவதில்லை. அவரின் பின்னால் ஐக்கிய தேசியக் கட்சியோ, சுதந்திரக்கட்சியோ, தமிழ் கூட்டமைப்போ, முஸ்லிம் காங்கிரஸோ இல்லை. நான் 119 ற்கு அறிவித்தும் யாரும் வரவில்லை. பொலிஸில் சென்று முறையிட்டேன். என்னை அரிவாளால் வெட்ட முயன்றவரை பொலிஸாரால் கூட கைது செய்ய முடியவில்லை. பின்னர் அவர் கைது செய்யப்பட்டாலும் விடுவிக்கப்பட்டுவிட்டார். எனது பாதுகாப்புக்காக அனுமதி பெற்ற கைத்துப்பாக்கி வழங்கப்பட்டிருக்கிறது.

எனக்கோ எனது மனைவிக்கோ, குடும்பத்தினருக்கோ உயிர் அச்சுறுத்தல் ஏற்படுமானால் குறைந்தளவு அதிகாரத்தை பயன்படுத்தி எனது துப்பாக்கியை பயன்படுத்துவேன் .எனக்கு ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Previous Post

படைப்புழுவின் தாக்கத்தை ஒழிப்பதற்கு நாடு முழுவதும் துரித வேலை

Next Post

பாராளுமன்ற சண்டை – விசாரணைக்குழுவில் மாவை சேனாதிராஜா

Next Post

பாராளுமன்ற சண்டை - விசாரணைக்குழுவில் மாவை சேனாதிராஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஜப்பானின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியுடன் டியூனிசியா வெளியேறியது

ஜப்பானின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியுடன் டியூனிசியா வெளியேறியது

June 21, 2026
செம்மணியில் மீட்கப்பட்ட பிற பொருட்கள் தொடர்பில் CID விசாரணை அறிக்கையும் சமர்ப்பிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல், செம்மணி விடயத்தில் அரசின் அணுகுமுறைய வரவேற்கின்றோம் – சிறிநேசன்

June 21, 2026
வங்கித் தகவல்களைப் பயன்படுத்தி சமூக ஊடக மோசடிகள் | பொலிஸார் எச்சரிக்கை

சமூக ஊடகங்கள் ஊடாக பெண்கள் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகரிப்பு: பொலிஸார் எச்சரிக்கை!

June 21, 2026
செம்மணி மனித புதைகுழியில் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 400ஐ கடந்தது!

செம்மணி மனித புதைகுழியில் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 400ஐ கடந்தது!

June 21, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures