Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கை ஒருநாள் கிரிக்கெட் குழாத்தில் இரண்டு வருடங்களின் பின்னர் கமிந்து மெண்டிஸ்

March 12, 2024
in News, Sports, முக்கிய செய்திகள்
0
இலங்கை ஒருநாள் கிரிக்கெட் குழாத்தில் இரண்டு வருடங்களின் பின்னர் கமிந்து மெண்டிஸ்

பங்களாதேஷுக்கு எதிராக சட்டோக்ராம் விளையாட்டரங்கில் புதன்கிழமை (13) ஆரம்பமாகவுள்ள 3 போட்டிகளைக் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாத்தில் சகலதுறை வீரர் கமிந்து மெண்டிஸ் பெயிரிடப்பட்டுள்ளார்.

இடதுகை துடுப்பாட்ட வீரரும் இரண்டு கைகளாலும் பந்துவீசுபவருமான கமிந்து மெண்டிஸ் இரண்டு வருடங்களுக்குப் பின்னர் சரவ்தேச ஒருநாள் கிரிக்கெட் குழாத்தில் இடம்பெறுகின்றார்.

அண்மையில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி ரி20 கிரிக்கெட் போட்டியில் அதிரடியாக அரைச் சதம் குவித்ததைத் தொடர்ந்து துடுப்பாட்ட வரிசையில் 3ஆம் இலக்கத்தில் பங்களாதேஷுக்கு எதிரான ரி20 தொடரில் விளையாடியிருந்தார்.

கழக மட்டப் போட்டிகளில் அவர் வழமையாக 3ஆம் இலக்கத்தில் விளையாடிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை அணியில் கமிந்து மெண்டிஸ் போன்ற சகலதுறை  வீரர்    இடம்பெறுவது அணிக்கு அனுகூலமாக அமையும் என அண்மையில் தெரிவுக் குழுத் தலைவர் உப்புல் தரங்க தெரிவித்திருந்தார்.

இது இவ்வாறிருக்க, ஆப்கானிஸ்தானுடனான கடைசி ரி20 போட்டியின்போது உபாதைக்குள்ளாகி பங்களாதேஷுடனான ரி20 தொடரைத் தவறவிட்ட பெத்தும் நிஸ்ஸன்க ஒருநாள் குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

அவர்களைவிட ஜனித் லியனகே, சஹான் ஆராச்சிகே, சாமிக்க கருணாரட்ன ஆகியோரும் ஒரு நாள் கிரிக்கெட் குழாத்தில் பெயரிட்பட்டுள்ளார்.

பங்களாதேஷுக்கு எதிராக ரி20 தொடரில் இலங்கை குழாத்தில் இடம்பெற்ற ஏஞ்சலோ மெத்யூஸ், தனஞ்சய டி சில்வா, தசுன் ஷானக்க, நிரோஷன் திக்வெல்ல, பினுர பெர்னாண்டோ, நுவன் துஷார, ஜெப்றி வேண்டசே ஆகியோர் நாடு திரும்பியுள்ளனர்.

பங்களாதேஷுக்கு எதிரான  சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாத்தில் குசல் மெண்டிஸ் (தலைவர்), சரித் அசலன்க (உதவித் தலைவர்), பெத்தும் நிஸ்ஸன்க, அவிஷ்க பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம, ஜனித் லியனகே, கமிந்து மெண்டிஸ், சஹான் ஆராச்சிகே, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, துனித் வெல்லாலகே, அக்கில தனஞ்சய, சாமிக்க கருணாரட்ன, டில்ஷான் மதுஷன்க, ப்ரமோத் மதுஷான், லஹிரு குமார ஆகியோர் இடம்பெறுகின்றனர்.

அவர்களில் பெத்தும் நிஸ்ஸன்க, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க, ஜனித் லியனகே கமிந்து மெண்டிஸ், வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன அல்லது அக்கில தனஞ்சய, டில்ஷான் மதுஷன்க, லஹிரு குமார ஆகியோர் முதலாவது போட்டியில் விளையாடுவர் என பெரும்பாலும் எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் கடந்த 37 வருடங்களில் நடைபெற்ற 54 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை 42 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. பங்களாதேஷ் 10 வெற்றிகளையே ஈட்டியுள்ளது. 2 போட்டிகளில் முடிவு கிடைக்கவில்லை.

Previous Post

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

Next Post

பாரிஸ் ஒலிம்பிக்கில் இஸ்ரேலுக்கு தடையில்லை: – சர்வதேச ஒலிம்பிக்குழு 

Next Post
உலக ஒலிம்பிக் தினம் இன்று!

பாரிஸ் ஒலிம்பிக்கில் இஸ்ரேலுக்கு தடையில்லை: - சர்வதேச ஒலிம்பிக்குழு 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

அனிருத்  திருமண வரவேற்பு நிகழ்வில் விஜய் – சங்கீதா!   

அனிருத்  திருமண வரவேற்பு நிகழ்வில் விஜய் – சங்கீதா!   

November 23, 2026
றினோன் – புளூ ஸ்டார் மோதும் சுப்பர் சிக்ஸ் கால்பந்தாட்டப் போட்டி இன்று

றினோன் – புளூ ஸ்டார் மோதும் சுப்பர் சிக்ஸ் கால்பந்தாட்டப் போட்டி இன்று

November 23, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

வடக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

November 22, 2026
ஆகாயத்தில் ஒரு தாரகை – திரைப்பட விமர்சனம்

ஆகாயத்தில் ஒரு தாரகை – திரைப்பட விமர்சனம்

November 22, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures