Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையில் ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு அமைய மிக விரைவில் அரசியல் தீர்வுக்கு இந்தியா ஆதரவு

July 16, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பவது தொடர்பான செய்தியை மறுக்கும் இந்தியா

இலங்கையில் ஜனநாயகக்கோட்பாடுகளுக்கும் அரசியலமைப்பிற்கும் அமைவாக மிகவிரைவாக அரசியல் தீர்வு அடைந்துகொள்ளப்படுவதற்கு இந்தியா முழுமையான ஆதரவை வழங்கும் என்று இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்திருக்கின்றது.

 அதுமாத்திரமன்றி முன்னாள் ஜனாதிபதி இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கோ அல்லது பயணிப்பதற்கோ ஏதேனுமொரு வகையில் இந்தியா உதவியதாக வெளியாகும் தகவல்களை முற்றாக மறுப்பதாகவும் உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்திருக்கின்றது.

 அதேவேளை ஜனநாயகக்கோட்பாடுகள், ஜனநாயகக்கட்டமைப்புக்கள் மற்றும் அரசியலமைப்பு என்பவற்றுக்கு அமைவாக சுபீட்சம் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றை இலக்காகக்கொண்ட மக்களின் அபிலாஷைகள் அடைந்துகொள்ளப்படுவதை முன்னிறுத்தி இந்தியா எப்போதும் இலங்கை மக்களுடன் உடன்நிற்கும் என்றும் உயர்ஸ்தானிகராலயம் மீள உறுதிப்படுத்தியுள்ளது.

வியாழக்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், இலங்கையில் அரசாங்கம் மற்றும் அதன் தலைமைத்துவம் ஆகியவற்றுடன் தொடர்புபட்ட நிலைவரங்களுக்கு ஜனநாயகக்கோட்பாடுகள், ஜனநாயகக்கட்டமைப்புக்கள் மற்றும் அரசியலமைப்பு ஆகியவற்றுக்கு அமைவாக வெகுவிரைவில் தீர்வு எட்டப்படுவதை இந்தியா எதிர்பார்ப்பதாகத் தெரிவித்திருந்தார் என்று தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், முன்நோக்கிப்பயணிப்பதற்கு விரும்பும் இலங்கை மக்களுக்கு இயலுமான அனைத்து வழிகளிலும் உதவுவதற்குத் தயாராக இருப்பதாக இந்தியா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் உறுதியளித்ததாகவும் தெரிவித்திருக்கின்றது.

இலங்கையில் தற்போது மேலோங்கிவரும் சவால்களுக்குத் தீர்வுகாணும் வகையில் இந்தியாவினால் இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்ட உதவிகள், இந்தியாவின் ‘அயலகத்திற்கு முதலிடம்’ மற்றும் பிராந்தியத்திலுள்ள அனைத்து நாடுகளுக்கும் பாதுகாப்பும் அபிவிருத்தியும் (சாகர்) ஆகிய கொள்கைகளை அடிக்கோடிட்டுக்காண்பிக்கும் வகையில் அமைந்திருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் இந்திய உயர்ஸ்தானிகராலயம், இலங்கை மக்களுடனான ஒருமைப்பாடும் அவர்களுக்கான ஆதரவும் தொடரும் என்றும் குறிப்பிட்டிருக்கின்றது.

மேலும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இலங்கை மக்களுக்கு உதவும் நோக்கில் 3.8 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவிகளை இந்தியா வழங்கியுள்ளமை தொடர்பில் அந்நாட்டு வெளிவிவகாரப்பேச்சாளர் சுட்டிக்காட்டியதாகத் தெரிவித்திருக்கும் உயர்ஸ்தானிகராலயம், முன்னாள் ஜனாதிபதி இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கோ அல்லது பயணிப்பதற்கோ ஏதேனுமொரு வகையில் இந்தியா உதவியதாக வெளியாகும் தகவல்களை முற்றாக மறுப்பதாகவும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

இலங்கைக்கு தொடர்ந்து சேவையாற்றுவேன் -கோட்டாபய ராஜபக்ஷ

Next Post

பிக் பொஸ் புகழ் நிரூப் அறிமுகமாகும் ‘ரெயின்போ’

Next Post
பிக் பொஸ் புகழ் நிரூப் அறிமுகமாகும் ‘ரெயின்போ’

பிக் பொஸ் புகழ் நிரூப் அறிமுகமாகும் 'ரெயின்போ'

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நிழல் – திரைப்பட விமர்சனம்

நிழல் – திரைப்பட விமர்சனம்

June 15, 2026
பீபா உலகக் கிண்ணப் போட்டியை கடைசி நேரத்தில் சமன் செய்தது ஜப்பான் ; சுவீடன், ஐவரி கோஸ்ட் வெற்றி

பீபா உலகக் கிண்ணப் போட்டியை கடைசி நேரத்தில் சமன் செய்தது ஜப்பான் ; சுவீடன், ஐவரி கோஸ்ட் வெற்றி

June 15, 2026
மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை : நில அடையாளம், இன அரசியல், வாழ்வாதாரம் | நூல் அறிமுகம்

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை : நில அடையாளம், இன அரசியல், வாழ்வாதாரம் | நூல் அறிமுகம்

June 15, 2026
ஜூன் 30க்குள் சொத்து, பொறுப்பு விபரங்களை சமர்ப்பிக்கவேண்டும் – இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவிப்பு

ஜூன் 30க்குள் சொத்து, பொறுப்பு விபரங்களை சமர்ப்பிக்கவேண்டும் – இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவிப்பு

June 15, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures