Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையில் இந்து பாரம்பரியத்தின் இருப்புக்கே ஆபத்து – புலம்பெயர் அமைப்புகள் இந்திய பிரதமருக்கு கடிதம்

April 6, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இலங்கையில் இந்து பாரம்பரியத்தின் இருப்புக்கே ஆபத்து – புலம்பெயர் அமைப்புகள் இந்திய பிரதமருக்கு கடிதம்

இலங்கையில் இந்து பாரம்பரியத்தின் இருப்புக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளதாக புலம்பெயர் அமைப்புகள் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளன.

ஏழு புலம்பெயர் அமைப்புகள் இணைந்து இந்த கடிதத்தை எழுதியுள்ளன.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை அரசாங்கம் தனது இராணுவத்தின் உதவியுடன் இலங்கையின் வடக்கு, கிழக்கில் இந்து கலாசாரம், பாரம்பரியம், கோவில் ஆகியவற்றின் இறுதிக் கோட்டையை இலக்குவைக்கிறது.

1948ஆம் ஆண்டின் பின்னர் 1800 ஆலயங்களையும் பாரம்பரியங்களையும் அழித்த பின்னர் இது இடம்பெறுகின்றது.

இலங்கையின் வட பகுதியில் அதிகளவு மதிப்புக்குரியதாக காணப்படும் கீரிமலை பகுதியில் காணப்பட்ட ஐந்து நூற்றாண்டு கால வரலாற்றை கொண்டுள்ள ஆதிசிவன் ஆலயம் இராணுவ ஆக்கிரமிப்பு என்ற போர்வையில் அழிக்கப்பட்டுள்ளதை ஆழ்ந்த கரிசனையுடனும் அவசரத்துடனும் நாங்கள் உங்களுக்கு தெரியப்படுத்துகின்றோம்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது இராணுவம் அந்த பகுதியை மிக நீண்டகாலம் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த பின்னர் பொதுமக்களை அங்கு செல்வதற்கு அனுமதித்த வேளையே இது தெரியவந்தது.

கோவில் இருந்த பகுதியில் அதனை அழித்துவிட்டு ஜனாதிபதி மாளிகையொன்றை கட்டியுள்ளனர்.

இதன் மூலம் இந்துக்கள் இறந்தவர்களுக்கான இறுதி மரியாதைகளை முன்னெடுக்கும் பகுதியின் புனிதத்தை சீர்குலைத்துள்ளனர்.

2015இல் இந்தியாவின் கௌரவ பிரதமர் நரேந்திர மோடி இந்த பகுதிக்கு அருகில் உள்ள நகுலேஸ்வரம் ஆலயத்துக்கு விஜயம் மேற்கொண்டு பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இலங்கையில் உள்ள இந்து பாரம்பரியம், கலாசாரத்தின் இறுதிச் சின்னமாக காணப்படுகின்றவற்றை அழிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் இலங்கை அரசாங்கம் செயற்படுகின்றது.

இலங்கை அரசாங்கத்தை பொருளாதார நெருக்கடியிலிருந்து இந்தியாவும், சர்வதேச சமூகமும் பிணையெடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள போதிலும் இது இடம்பெறுகின்றது.

புனிதப் பொருள்களை அவமதிக்கும் இந்த செயல் இடம்பெற்ற சில காலத்துக்குள் கிழக்கு திருகோணமலையில் உள்ள இந்துக்களின் புனித பகுதியான கன்னியா நீரூற்றை அனுராதபுர  நகரத்துடன் தொடர்புடையது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதனை இராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் உள்ள ஆதி சிவன் ஐயனார் கோவில் அழிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டம் வெடுக்குநாறி மலையில் உள்ள ஆலயத்தின் பல விக்கிரகங்கள் களவாடப்பட்டன.

இலங்கைக்கான சர்வதேச உதவிகளை நாங்கள் வரவேற்கும் அதேவேளை, இலங்கையில் இந்து பாரம்பரியம், கலாசாரம் ஆகியவற்றை அழிக்கும் தனது நிகழ்ச்சி நிரலுக்கு இலங்கை அரசாங்கம் இந்த உதவியை பயன்படுத்த நிதி வழங்கும் சமூகம் அனுமதிக்கக் கூடாது என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

இந்து மத கலாசாரம்  அழிக்கப்படுவதை தடுப்பதற்காக இலங்கையின் வடகிழக்கு பகுதிகளில் சர்வதேச பாதுகாப்பு பொறிமுறையை அமைக்க வேண்டும் என இலங்கை அரசாங்கத்தை, இலங்கைக்கு நிதி வழங்கும் சமூகம் வலியுறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

Previous Post

இந்தியன் 2′ படத்தில் இணைந்த நட்சத்திர வாரிசு

Next Post

40 வருடங்களின் பின் மணற்கேணி எல்லைக்கிராமத்தை மீட்டெடுக்க பிரயத்தனம் 

Next Post
40 வருடங்களின் பின் மணற்கேணி எல்லைக்கிராமத்தை மீட்டெடுக்க பிரயத்தனம் 

40 வருடங்களின் பின் மணற்கேணி எல்லைக்கிராமத்தை மீட்டெடுக்க பிரயத்தனம் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026
வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

June 29, 2026
முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

June 29, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures