Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கைக்கு கடத்த இருந்த கேரள கஞ்சா பொதிகளுடன் தமிழகத்தில் மூவர் கைது

April 8, 2022
in News, Sri Lanka News
0
இலங்கைக்கு கடத்த இருந்த கேரள கஞ்சா பொதிகளுடன் தமிழகத்தில் மூவர் கைது

தமிழகத்தின் நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட ஆறு காட்டுத்துறை உப்பனாறு அருகிலிருந்து படகின் மூலம்  இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியாக கேரள கஞ்சா மூட்டைகளுடன் நேற்று வியாழக்கிழமை (7) இரவு மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இலங்கைக்கு கடல் வழியாக கேரள கஞ்சா கடத்தப்பட உள்ளதாக வேதாரண்யம் கடலோர காவல் நிலைய துணை காவல் கண்காணிப்பாளருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று வியாழக்கிழமை (7) இரவு குறித்த பகுதிக்குச் சென்ற வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த பகுதியில் நின்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்தனர்.

இதன் போது குறித்த வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 09 சாக்கு மூட்டைகள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த சாக்கு மூட்டைகளைப் பிரித்துப் பார்த்த போது அதில் கேரள கஞ்சா உள்ளமை தெரிய வந்தது.

இதன்போது வாகனத்தை ஓட்டி வந்த ஆறு காட்டுத்துறை, சுனாமி நகரைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை கைது செய்து, வேதாரண்யம் கடலோர காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இதன் போது குறித்த வாகனத்தின் சாரதி வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த கஞ்சா பொதிகள்  ஆறுகாட்டுத்துறை வடக்குத் தெருவைச் சேர்ந்த   பாரதிதாசன்  என்பவருக்கு சொந்தமானது என தெரிய வந்தது.

இந்த நிலையில் குறித்த நபரையும் பொலிஸார் கைது  செய்துள்ளதோடு,   மேலும் கடற்கரையில் நின்று கொண்டிருந்த பரமத்தி வேலூர் இலங்கை அகதி முகாமில் உள்ள காந்தரூபன் என்பவரையும்,   சந்தேகத்தின் பேரில் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

விசாரணைகளின் போது 9  சாக்கு மூட்டைகளில் இருந்த சுமார் 25 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 260 கிலோ கேரள கஞ்சா இலங்கைக்கு கடத்த இருந்தமை  தெரியவந்தது.

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அட்டனில் அரச ஊழியர்கள் போராட்டம்!

Next Post

இன்று முதல் 296 பஸ்கள் விசேட சேவையில்

Next Post
மறுசீரமைக்கப்பட்ட 200 பஸ்கள் மீண்டும் சேவைக்கு

இன்று முதல் 296 பஸ்கள் விசேட சேவையில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு இலங்கையினால் தகுதிபெற முடியும் என ஹர்ஷித்தா சமரவிக்ரம நம்பிக்கை!

மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு இலங்கையினால் தகுதிபெற முடியும் என ஹர்ஷித்தா சமரவிக்ரம நம்பிக்கை!

June 26, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

June 26, 2026
என் மீதான குற்றச்சாட்டுப் பத்திரத்தை வடக்கு ஆளுநர் வழங்கவில்லை ; நீதி கோரி நீதிமன்றம் செல்வேன் – ஞா.கிசோர் 

என் மீதான குற்றச்சாட்டுப் பத்திரத்தை வடக்கு ஆளுநர் வழங்கவில்லை ; நீதி கோரி நீதிமன்றம் செல்வேன் – ஞா.கிசோர் 

June 26, 2026
மிகக் கொடூரமான கடந்த ஆட்சியில் கூட இத்தகைய ஜனநாயக விரோத செயல்கள் இடம்பெறவில்லை

மிகக் கொடூரமான கடந்த ஆட்சியில் கூட இத்தகைய ஜனநாயக விரோத செயல்கள் இடம்பெறவில்லை

June 26, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures