Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இராண்டாம் உலக போரில் பங்கேற்ற முதலாவது ஈழத்தமிழனின் 100 ஆவது பிறந்ததினம்

February 27, 2018
in News, Politics, World
0
இராண்டாம் உலக போரில் பங்கேற்ற முதலாவது ஈழத்தமிழனின் 100 ஆவது பிறந்ததினம்

இராண்டாம் உலக போரில் பங்கேற்ற முதலாவது ஈழத்தமிழனின் 100 ஆவது பிறந்ததினம் திருகோணமலையில் கொண்டாடப்பட்டுள்ளது.

இலங்கையின் வடக்கே உள்ள யாழ்ப்பாணம் நகரில் உடுவில் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் செல்லையா கனகசபாபதி.

1918 ஆம் ஆண்டு பிறந்த இவரை 20 ஆவது வயதில் தொழில் எதுவும் செய்யாததால் பெற்றோர் வீட்டை விட்டு வெளியேறும்படி கூறியுள்ளனர்.

இதனால் சாதித்து காட்ட வேண்டும் என்னும் நோக்கில் பிரிட்டிஷ் விமான படையில் இணைந்துள்ளார்.

1941 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் விமான படைக்கு தெரிவான 18 பேருடன் இவரும் ஒருவராக இங்கிலாந்திற்கு பயிற்சிக்கு சென்றுள்ளார்.

இங்கிலாந்தில் சீ.கே.பதி என பெயரை மாற்றிய செல்லையா கனகசபாபதி பயிற்சிகளின் பின் கனடாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

கனடாவில் பெரும் இன்னல்களுக்கு மத்தியில் உயிர்தப்பியுள்ளதாகவும், முதல் தடவை இடம்பெற்ற பரீட்சையில் சித்தியடையாமல், மீண்டும் 2 ஆம் தடவை பரீட்சை எழுதி சித்தியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின் மீண்டும் இங்கிலாந்திற்கு விமானியாக அனுப்பிவைக்கப்பட்ட செல்லையா கனகசபாபதி 2 ஆம் உலக போரில் இங்கிலாந்தின் போர் விமான விமானியாக செயற்பட்டுள்ளார்.

மேலும் 2 ஆம் உலக போரில் இவரது விமானத்தின் மூலம் பல தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளார். அது மட்டுமன்றி நீர்மூழ்கி கப்பல் ஒன்றையும் தாக்கியுள்ளார்.

தொடர்ந்து 2 ஆம் உலக போர் நிறைவடைந்ததும் இங்கிலாந்தின் கரையோர பாதுகாப்பு படையிலும் பணியாற்றியுள்ளார்.

அதனை தொடர்ந்து இலங்கை திரும்பிய கனகசபாபதி ஏயார் இந்தியா விமானியாகவும் 27 வருடங்கள் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் தற்போது தனது பணியில் இருந்து ஓய்வு பெற்ற கனகசபாபதி திருகோணமலையில் உள்ள அவரது விடுதியில் தங்கியுள்ளதாகவும், 100 ஆவது பிறந்ததினத்தை கொண்டாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 1944 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் விமான படையில் கடமையாற்றிய முதலாவது ஈழத்தமிழன் கனகசபாபதிக்கு பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

தமிழர்கள் ஆண்மைபரிசோதனை செய்துகொள்ள வேண்டுமா ?

Next Post

சடலமாக மீட்கப்பட்ட யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன்!

Next Post

சடலமாக மீட்கப்பட்ட யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

June 19, 2026
தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

June 19, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

காவல்துறையினர் குறித்து முறைப்பாடளிக்க புதிய முறைமை அறிமுகம்!

June 19, 2026
விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

பயிர்கடன் குறித்து முதல்வர் விடுத்த அதிரடி உத்தரவு

June 18, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures