இப்படியும் நடக்குமா? 2வயது சிறுவனுடன் திருடப்பட்ட கார்.

இப்படியும் நடக்குமா? 2வயது சிறுவனுடன் திருடப்பட்ட கார்.

கனடா- பிரம்ரனில் வெள்ளிக்கிழமை இரவு வாகனம் ஒன்று திருடப்பட்டது.வாகனத்திற்குள் 2-வயது சிறுவன் ஒருவன் இருந்துள்ளான்.குழந்தையுடன் திருடன் வாகனத்தை திருடியுள்ளான். ஆனால் குழந்தை கண்டு பிடிக்கப்பட்டதாக பீல் பிராந்திய பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
குழந்தை நெடுஞ்சாலை 410 மற்றும் Steeles அவெனியு பகுதியில் வீதியின் அருகில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிசாரின் தகவல் தெரிவிக்கி;ன்றது.
சிறுவன் ஆரோக்கியமாக இருப்பதாகவும் பெற்றோரிடம் சேர்க்கப்பட்டு விட்டதாகவும் பொலிசார் கூறினர்.
அவ்வழியால் சென்றவர்கள் குழந்தையை கண்டுள்ளனர்.
கென்னடி வீதி மற்றும் குயின் வீதியில் உள்ள பிளாசாவில் காணாமல் போன குழந்தை இருந்த வாகனத்தை கண்டு பிடிக்க பொலிசார் வெள்ளிக்கிழமை இரவு பொது மக்களின் உதவியை நாடி ருவிட்டரில் செய்தி வெளியிட்டனர்.வெள்ளிக்கிழமை இரவு கிட்டத்தட்ட 9.30மணியளவில் இச்சம்பவம் நடந்ததாக கூறப்படுகின்றது.
இயக்கத்தில் இருந்த வாகனத்திற்குள் குழந்தை கவனிப்பாரற்ற நிலையில் விடப்பட்டிருந்தது.இயங்கிக் கொண்டிருந்த ஸ்போட் பயன்பாட்டு வாகனத்திற்குள் குழந்தையை விட்டு விட்டு அவனது தாயும் தந்தையும் பிளாசாவில் உள்ள சலவையகம் ஒன்றிற்குள் சென்று விட்டனர் என பொலிசார் தெரிவித்தனர்.
வாகனம் கறுப்பு நிற Mazda CX7 ஒன்ராறியோ தகட்டு இலக்கம்BYBP371.
வாகனம் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை.
தகவல் தெரிந்தவர்கள் பொலிசாருடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News