தோட்டத் தொழிலாளர்களுக்கு மார்ச் மாதம் முதலாம் திகதி முதல்1,000 ரூபாவை வழங்குவதற்கான அனைத்து இணக்கப்பாடுகளும் கம்பனிகளுடன் எட்டப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
மின்சக்தி அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதியின் பிரகாரம் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிர்வரும் மார்ச் மாதம் முதல் 1.000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளது.
கம்பனிகளுடன் நேற்றுமுன்தினம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இது குறித்த இறுதி இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. கம்பனிகளுக்கு அரசாங்கம் சில சலுகைகளை வழங்கவுள்ளது. அதன் அடிப்படையில் கட்டாயம் மார்ச் மாதம் முதலாம் திகதிமுதல் 1,000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படும் என்றார்.













