Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆயிரக்கணக்கான விவசாயிகள் கைது, கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டம்

February 23, 2018
in News, Politics, World
0

ராஜஸ்தான் மாநில அரசு, ராஜஸ்தான் விவசாயிகள் சங்கத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை அமல்படுத்தக்கோரி, வியாழன் அன்று மாநிலத் தலைநகர் ஜெய்பூருக்கு அணிதிரண்டு வந்த விவசாயிகளை, காவல்துறையினர் நகருக்குள் நுழையவிடாது கைது செய்தனர். எனினும், விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டம் தொடரும் என்று ஜெய்பூர் வந்துள்ள அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அசோக் தாவலே கூறினார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் 2017 செப்டம்பர் 1 முதல் 13 தேதிகள் வரை விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி, விவசாய விளைபொருள்களுக்குக் கட்டுப்படியான விலைகள், ஏழை விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் மகாமுற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் ராஜஸ்தான் மாநிலப் பிரிவு அறைகூவல் விடுத்திருந்தது. அப்போது போராட்டத்தின் வீச்சு கண்டு, இக்கோரிக்கைகளில் சிலவற்றை ராஜஸ்தான் மாநில அரசு ஏற்றுக்கொண்டு, விவசாயிகள் சங்கத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டது. அதனைத்தொடர்ந்து மகாமுற்றுகைப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

ஒப்பந்தம் கையெழுத்தாகி ஆறு மாதங்கள் கடந்தபின்னும் மாநில அரசு ஒப்பந்தத்தை நிறைவேற்ற முன்வராமல் விவசாயிகளுக்குத் துரோகம் செய்துவிட்டது. இதனைக் கண்டித்தும், ஒப்பந்தத்தை நிறைவேற்றக்கோரியும் மாநிலம் முழுதுமிருந்து விவசாயிகள் மகாமுற்றுகைப் போராட்டத்தைத் தொடர்ந்திட வியாழன் அன்று மாநிலத் தலைநகர் ஜெய்பூர் நோக்கி அணிதிரண்டு வந்தார்கள். அவர்களை ஜெய்பூருக்குள் நுழைய விடாது காவல்துறையினர் கைது செய்தனர். விவசாயிகள் சங்கத்தின் அகில இந்தியத் துணைத்தலைவர் அம்ராராம் மற்றும் மாநிலத் தலைவர்கள் பலரும் புதனன்றே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். பல மாவட்டங்களில் விவசாயிகள் மாவட்டங்களிலிருந்து மாநிலத் தலைநகருக்குப் புறப்படுவதற்கு முன்பே தடுத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான் மாநில அரசின் போலீஸ் அடக்குமுறையைக் கேள்விப்பட்டதும், தலைநகர் புதுதில்லியிலிருந்து அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் டாக்டர் அசோக் தாவலே மற்றும் இணைச் செயலாளர் விஜு கிருஷ்ணன் ஜெய்பூர் விரைந்தனர். போலீசாரின் அடக்குமுறையையும் மீறி நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஜெய்பூரில் உள்ள விவசாயிகள் சங்கத்தின் முன் திரண்டனர். அவர்கள் மத்தியில் அசோக் தாவலே உரையாற்றினார். அப்போது, மாநில அரசின் அடக்குமுறையைக் கடுமையாக விமர்சித்த அவர், மாநில அரசு விவசாயிகள் சங்கத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றும்வரை போராட்டம் தொடரும் என்றார்.

பின்னர் மாநிலத்தில் ஜெய்பூர், சிகார் மற்றும் பல்வேறு பகுதிகளிலும் தடுத்துநிறுத்தி வைக்கப்பட்டுள்ள விவசாயிகளைச் சந்தித்திட அவர்கள் விரைந்தனர். பின்னர், ஜெய்பூர் மத்திய சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அம்ரா ராமைச் சந்திப்பதற்கும் அவர்கள் முயற்சி செய்கிறார்கள்.

Previous Post

வாலிபரை அடித்துக் கொன்றதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்

Next Post

ஊழலை அம்பலப்படுத்திய 15 ஊடகவிலாளர்கள் படுகொலை

Next Post

ஊழலை அம்பலப்படுத்திய 15 ஊடகவிலாளர்கள் படுகொலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தீபச்செல்வனின் நூல்கள் தடுப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை

தீபச்செல்வனின் நூல்கள் தடுப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை

June 20, 2026
வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50ஆவது ஆண்டின் நிறைவு எழுச்சி மாநாடு

வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50ஆவது ஆண்டின் நிறைவு எழுச்சி மாநாடு

June 20, 2026
‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

June 20, 2026
செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

June 20, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures