யாழ்ப்பாணம் பெரியவிளான் பகுதியில் இடம்பெற்ற காணி தொடர்பான தகராறு சம்பவம் ஒன்று தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ். பெரியவிலான் பகுதியில் கடந்த சனிக்கிழமை (25.04.2026) காணி பிணக்கு தொடர்பில் அர்ச்சுனாவுக்கும் மற்றுமொரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்ட சம்பவம் நாடளாவிய ரீதியில் பேசுபொருளானது.
இந்நிலையில் வாய்த்தர்க்கம் முற்றியதோடு அர்ச்சுனா இராமநாதனதன் வைத்திருச்த தனது கைத்துப்பாக்கியை காட்டி மற்றைய தரப்பினரை உயிர் அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.
மனிதவுரிமை ஆணைக்கு
இது தொடர்பான காணொளி வெளியாகி பெரும் பரபரப்பை எற்படுத்திய நிலையில் , சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினர் , மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

மேலும் சம்பவத்தின் போது, அர்ச்சுனாவின் தாக்குதலுக்கு உள்ளான இளைஞன் ஒருவர் யாழ் .போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் முறைபாட்டில் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில், அர்ச்சுனா மற்றும் மற்றைய தரப்பினை சேர்ந்த பெண்ணொருவரும் இடம்பெற்ற விசாரணைகளின் பின் நாளை (29.04.2026) வரை விளக்கமறியலில் தடுத்து வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
