Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அரச அதிகாரிகள் முதுகெலும்புடன் செயற்பட வேண்டும் | பேராயர்

November 5, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கெளரவமான சம்பளம் ஆசிரியர்களுக்கு கட்டாயமாக கொடுக்க வேண்டும்!

நாட்டு மக்களே வாக்களித்துத் தேர்வு செய்த அரச தலைவர்கள் மக்களுக்கு துரோகமிழைக்கின்றனர்.
அவர்களே நாட்டைக் காட்டிக் கொடுக்கின்றனர் என்று பேராயர் காடினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றம்சுமத்தியுள்ளார்.

உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு நீர்கொழும்பில் இன்று (04) இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அரசியல் தலைவர்கள் பொதுமக்களின் பிரச்சினைகள் குறித்து உணர்வுபூர்வமாக சிந்திப்பதில்லை. இதன் காரணமாகவே சர்வதேச நாடுகளிடம் எங்களின் இயலாமையை கூறி கையேந்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

முறையற்ற கொள்கை தீர்மானங்கள் காரணமாக நாடு பாரியளவில் பின்னோக்கிச் சென்றுள்ளது. இந்தநிலைமை காரணமாக 1978 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து நாடு மோசமான நிலைமைக்கே சென்று கொண்டிருக்கின்றது.

சட்டம் என்ற கட்டமைப்பு முற்றிலும் சீர்குழைந்துள்ளது. நாங்கள் சுதந்திரமாக இருக்கின்றோமா? இந்தியாவிற்கும், சீனாவுக்கு, அமெரிக்காவுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் அடிபணிந்து அவர்களிடம் கையெந்துகிறோம்.

அதே போன்று சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு தலைசாய்த்து இந்த நாட்டை எவ்வாறான நிலைமைக்கு கொண்டு சென்றுள்ளார்கள். இதற்கு முழுமையான பொறுப்பை அரை போத்தல் சாராயத்திற்கும், 500 ரூபாய்க்கும் வாக்குகளை விற்பனை செய்த அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நிர்வாகம் செய்ய முடியாதவர்கள் வீட்டுக்குச் செல்ல வேண்டும். அரசியலமைப்பு பரிந்துரையை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி ஒரு குழுவை நியமித்தார். அந்த குழு நாட்டில் உள்ள முக்கிய தரப்பினர் யாரிடமும் சென்று பரிந்துரைகளை பெறவில்லை.

அரசியலமைப்பு திருத்த பரிந்துரை குழுவினர் தன்னிச்சையாக தயாரித்த அறிக்கையை நடைமுறைப்படுத்தினால் நாட்டின் எதிர்காலம் அதள பாதாளத்திற்கு செல்லும் என்பது திண்ணம்.

அந்த அரசியலமைப்பு பரிந்துரையின் படி யாரேனும் ஒருவர், அரசாங்கத்திற்கு எதிராகவோ, அரச நிறுவனம் ஒன்றுக்கு எதிராகவோ, வெளிநாட்டு அரச தலைவர், ஐக்கிய நாடுகள் சபை அல்லது அது சார்ந்த அமைப்புகளிடம் முறைப்பாடு செய்தால் அவரின் குடியுரிமையை 20 வருடங்களுக்கு குறையாமல் ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

Previous Post

ஆசிரியர்களுக்கான ஆடை மாற்றப்படாது – சுசில் பிரேம ஜயந்த

Next Post

மின்வெட்டு குறித்த புதிய அறிவிப்பு

Next Post
நாளைய மின்வெட்டு தொடர்பான விபரம் வெளியானது

மின்வெட்டு குறித்த புதிய அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

செம்மணி அச்சத்தில் பின்வாங்கும் அநுர அரசாங்கம்! சிறீதரன் குற்றச்சாட்டு

July 1, 2026
நடிகர் பாரத் நடிக்கும் ‘மிஸ்டர் பாரத்’ படத்தின் அறிமுக பாடல் வெளியீடு

நடிகர் பாரத் நடிக்கும் ‘மிஸ்டர் பாரத்’ படத்தின் அறிமுக பாடல் வெளியீடு

July 1, 2026
கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

June 30, 2026
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

June 30, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures