அமெரிக்காவில் பதற்றம்..! பீட்டா காரியாலயம் மக்களால் முற்றுகை..!
அமெரிக்காவில் அமைந்துள்ள பீட்டா அமைப்பின் தலைமை காரியாலயத்திற்கு முன்பாக ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தெரியவருவதாவது,
ஜல்லிக்கட்டினை தடை செய்தமைக்காக தமிழகம் எங்கும் கடந்த வாரம் முன்னெடுக்கப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டத்தில் 6 இலட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது பீட்டா அமைப்பினை தடை செய்ய வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருந்தது. அந்த போராட்டம் தமிழ்நாட்டினை தவிர்த்து உலகம் எங்கும் குறிப்பாக இலங்கையிலும் நடாத்தப்பட்டிருந்தது.
இவ்வாறு உலகெங்கும் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
எனினும் தற்போது அமெரிக்காவின் வேர்ஜீனியாவில் உள்ள பீட்டாவின் தலைமை காரியலத்தினை முற்றுகையிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
குறிப்பாக பீட்டா அமைப்பினை தடை செய்யுமாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தினை நடத்தி வருவதால் பொலிஸாரும் அந்த இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் புதிய ஜனாதிபதி ட்ரம்பின் பதவியேற்புக்கு முன்னரும் பின்னரும் அந்த நாட்டில் பாரியளவிலான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு விவகாரத்திற்காக பீட்டா அமைப்பை தடைசெய்யகோரிய ஆர்பாட்டமானது எவ்வாறு ட்ரம்பின் காதுகளை சென்றடையப்போகின்றதோ..?
உலகெங்கும் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள குறித்த பீட்டா அமைப்பிற்கு, அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் ஏதாவது செய்வாரா என்பது அனைவரினதும் எதிர்பார்ப்பாக உள்ளது.
குறிப்பாக தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் இன்னொரு தடவை அடக்குமுறைக்குள் சென்றுவிட விடக்கூடாது என்பதே அனைத்து தமிழர்களினதும் குறிக்கோளாக காணப்படுகின்றது.
தமிழ்நாட்டில் போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்கும், இளைஞர்களை கலைப்பதற்கும் பொலிஸார் அடாவடித்தனமாக செயற்பட்டிருந்தனர்.
மேலும், இந்த பீட்டா அமைப்பினை தடை செய்யுமாறு இந்திய உச்சநீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.