Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அமெரிக்காவில் சாதிப் பாகுபாட்டை தடை செய்த முதல் நகரமாகியது சியாட்டில்

February 23, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
அமெரிக்காவில் சாதிப் பாகுபாட்டை தடை செய்த முதல் நகரமாகியது சியாட்டில்

அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத் தலைநகரான சியாட்டில், சாதிய ரீதியான பாரபட்சங்களை தடை செய்துள்ளது. இதற்கான தீர்மானம் சியாட்டில் மாநகர சபையில் நேற்று அங்கீகரிக்கப்பட்டது.

இத்தடைக்கு ஆதரவாக 6 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டன.

அமெரிக்காவில் சாதிப் பாகுபாடுகளுக்கு உத்தியோகபூர்வமாக தடை விதித்த முதலாவது நகரம் சியாட்டில் ஆகும்.

சியாட்டில் மாநகர சபையின் இந்திய அமெரிக்க அங்கத்தவரான ஷாமா சாவந்த் இதற்கான பிரேரணையை முன்வைத்தார்.

இந்த வெற்றியை அமெரிக்கா முழுவதும் பரப்புவதற்கான இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டும் என வாக்கெடுப்பின் பின்னர் அவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் பிரமாணக் குடும்பத்தில் தான் வளர்க்கப்பட்டபோதிலும், சாதிப் பாகுபாடுகளை தான் கண்டுள்ளதாக முன்னர் அவர் கூறியிருந்தார்.

தெற்காசியாவிலிருந்து புலம்பெயர்ந்தவர்களால் அமெரிக்காவுக்கு சாதிப் பாகுபாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

கலிபோர்னியாவைத் தளமாகக் கொண்ட Cisco நிறுவனம் சாதிப் பாகுபாடு தொடர்பான வழக்கு ஒன்றை எதிர்கொண்டுள்ளது. தனது சாதி காரணமாக தான் பாரபட்சமாக நடத்தப்பட்டதாகக் கூறி முன்னாள் ஊழியர் ஒருவர் இந்த வழக்கை தொடுத்துள்ளார்.

இந்நிலையில், “வொஷிங்டன் மாநிலத்தில் 167,000 தெற்காசியர்கள் வசிக்கின்றனர். அவர்களில் அதிகமானோர் சியாட்டில் பெரும்பாகப் பிராந்தியத்தில் வசிக்கின்றனர். இந்நிலையில், சாதிப் பாரபட்ச விவகாரம் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும்” எனவும் ஷாமா சாவந்த் கூறியுள்ளார்.

அமெரிக்க தலித் அமைப்புகள் இத்தடையை வரவேற்றுள்ளன.

தலித் உரிமைகள் அமைப்பொன்றின் பணிப்பாளரான தேன்மொழி சௌந்தரராஜன் இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில், ‘நாட்டில் முதலாவதாக, சியாட்டில் நகரம் சாதிப் பாகுபாட்டை தடை செய்ததன் மூலம், வெறுப்புணர்வை அன்பு வென்றுவிட்டது’ எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இந்து மன்றம் இத்தடை தொடர்பில் அதிருப்தி தெரிவித்துள்ளது.

‘சாதிப் பாரபட்சங்கள் தவறானவை. ஆனால், சியாட்டில் நகரின் நடவடிக்கை தெற்காசிய சமூகத்தினரை தனிமைப்படுத்துகிறது’ என அம்மன்றம் கூறியுள்ளது.

Previous Post

தமிழர்களின் சுய உரிமை பாதுகாக்கப்படும் வகையில் உரிய வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் | அமைச்சர் அலி சப்ரி

Next Post

இடிபாடுகளில் மீட்டெடுத்த பூனையை தத்தெடுத்த தீயணைப்பு வீரர்..!

Next Post
இடிபாடுகளில் மீட்டெடுத்த பூனையை தத்தெடுத்த தீயணைப்பு வீரர்..!

இடிபாடுகளில் மீட்டெடுத்த பூனையை தத்தெடுத்த தீயணைப்பு வீரர்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சோமரத்ன ராஜபக்‌சவிடம் பன்னாட்டு விசாரணை! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

சோமரத்ன ராஜபக்‌சவிடம் பன்னாட்டு விசாரணை! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

June 24, 2026
பிளாக்மெயில் – திரைப்பட விமர்சனம்

நடிகர் ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘இம்மாற்றல்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

June 24, 2026
அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

June 23, 2026
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

அரச பாடசாலைகளில் முதலாம் தர மாணவர் சேர்க்கைக்கான புதிய சுற்றுநிருபத்துக்கு அமைச்சரவை அனுமதி

June 23, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures