Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அனுரவிடம் செய்தி சொல்வதற்காக கொழும்பில் வலி வடக்கு மக்கள் போராட்டம்

July 15, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அனுரவிடம் செய்தி சொல்வதற்காக கொழும்பில் வலி வடக்கு மக்கள் போராட்டம்

35 வருடங்களாக இடம்பெயர்ந்து துன்பத்தில் இருக்கின்றோம் நாம் போராட்டத்தில் ஈடுபட்ட போது அரச அதிகாரிகள் அதனை  அலட்சியம் செய்து விட்டனர் இதனால் ஜனாதிபதிக்கு எங்கள் நிலைiயை தெரிவிப்பதற்காக கொழும்பிற்கு வந்தோம் என கொழும்பில் ஜனாதிபதி அலுவலகத்தின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வலிகாமம் காணி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் உள்ள விடுவிக்கப்படாத நிலங்களை விடுவிக்க வலியுறுத்தி இன்றைய தினம்  ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் போராட்டமொன்று நடைபெற்றது. 

குறித்த போராட்டத்தில், விடுவிக்கப்படாத காணிகளின் உரிமையாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் பலர்  பங்கேற்றனர்.

வலிகாமம்விடுவிக்கப்படாத காணிகளின் உரிமையாளர்கள் மேலும் தெரிவித்ததாவது. பழைய வர்த்தமானியை நீக்கி எங்களின் காணிகளை எங்களிடம் உடனடியாக ஒப்படைக்கவேண்டும்.

35 வருடங்களாக இடம்பெயர்ந்து பெரும் துன்பத்தில் இருக்கின்றோம்.வலிகாமத்தில் விடுவிக்கப்படவேண்டிய 2400 ஏக்கர் காணி உள்ளது அதனை உடனடியாக விட்டுதரவேண்டும்.

நாங்கள் மயிலிட்டியில் ஐந்து நாள் போராட்டம் நடத்தினோம் அதன்போது எந்த அரச அதிகாரியும் வந்து எங்களுடன் பேசவும் இல்லை எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தரவும் இல்லை.

இவ்வாறான நிலையில் ஜனாதிபதிக்கு அந்த செய்தி சென்றிருக்காது என்ற காரணத்தினால் இன்று கொழும்பில் நாங்கள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்திருக்கின்றோம்.

ஜனாதிபதிக்கு நாங்கள் எங்களின் நிலையை தெரிவிப்பதற்காகவும் அவருக்கு மகஜர் கையளிப்பதற்காகவும்  இன்று இந்த போராட்டத்தினை முன்னெடுத்திருக்கின்றோம்

எங்கள் காணிகளை விரைவாக விட்டுத்தரவேண்டும்,மயிலிட்டியில் 1200 ஏக்கர் காணியை விடுவிக்கவேண்டும், அதில் சிறுபகுதிதான் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் பயன்பாட்டின் கீழ் உள்ளது ஏனையது வெறும் காணியாக காணப்படுகின்றது.

அந்தக்காணியின் உரிமையாளர்கள் வந்துவீதியில் நின்று பார்த்துவிட்டு திரும்பிச்செல்லவேண்டிய நிலை காணப்படுகின்றது.சும்மா இருக்கும் காணியை எங்களிடம் தந்தால் நாங்கள் எங்கள் காணிக்குள் சந்தோசமாக இருப்போம்.

இதனை நாங்கள் பல இடத்தில் தெரியப்படுத்தியும் நடவடிக்கை எதுவும் இடம்பெறவில்லை.

ஜனாதிபதி செய்துதருவார் என்ற நம்பிக்கை இருக்கு இதன்காரணமாகத்தான் நாங்கள் இங்கு வந்து போராடுகின்றோம்.ஜனாதிபதி எங்கள் காணிகளை விரைவாக விடுவித்து தரவேண்டும்.

இதேவேளை இந்த போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த பெண்ணொருவர்  நாங்கள் எங்கள் காணிகளை விட்டுவிட்டு இங்கே இருக்கின்றோம் அவர்கள் தேங்காய் மாங்காய் பிடுங்குகின்றார்கள் என தெரிவித்தார்.

காணிகளை விட்டால்தான் நாங்கள் சீவிக்கலாம் இப்பவும் அங்கு ஒரு ஆக்களும் இல்லை எங்கள் கோவிலுக்கு கூட போகமுடியவில்லை என தெரிவித்த அவர் ஜனாதிபதியிடம் இதனை கேட்க போகின்றோம் எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் கோவில் நாங்கள் அங்கிருந்து வெளிக்கிட்டு முப்பத்தைந்து நாற்பது வருடங்களாகின்றன என தெரிவித்தார்.

Previous Post

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தாயின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட இஷாரா செவ்வந்தியின் சகோதரன்!

Next Post

சரிந்தது மேற்கிந்தியத் தீவுகள் | ஸ்டாக் அதிவேக 5 விக்கெட்கள்

Next Post
சரிந்தது மேற்கிந்தியத் தீவுகள் | ஸ்டாக் அதிவேக 5 விக்கெட்கள்

சரிந்தது மேற்கிந்தியத் தீவுகள் | ஸ்டாக் அதிவேக 5 விக்கெட்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சஹ்ரானை உருவாக்கிய சிந்தனைகள் இன்னும் நாட்டில் செயற்படுகின்றன ; ஞானசார தேரர் குற்றச்சாட்டு

சஹ்ரானை உருவாக்கிய சிந்தனைகள் இன்னும் நாட்டில் செயற்படுகின்றன ; ஞானசார தேரர் குற்றச்சாட்டு

June 13, 2026
எரிபொருள் விநியோகத்திற்கு QR நடைமுறைப்படுத்துங்கள் | அதிபர் சங்கம் ஐனாதிபதியிடம் கோரிக்கை

எரிபொருள் மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு | விலை அதிகரிப்பு பற்றி இன்னும் முடிவில்லை!

June 13, 2026
கொலையாளிகளும் ஊழல்வாதிகளும் உத்தமர்களாக வர இடமளிக்க மாட்டோம் | பேராயர்

கொலையாளிகளும் ஊழல்வாதிகளும் உத்தமர்களாக வர இடமளிக்க மாட்டோம் | பேராயர்

June 13, 2026
அபிவிருத்தியின் போர்வையில் இன அழிப்பு தொடர்கிறது – அருட்தந்தை சத்திவேல்

செம்மணி புதைகுழி உண்மைகள் தெற்கின் மனசாட்சியைத் தட்டியெழுப்ப வேண்டும் – அருட்தந்தை மா. சத்திவேல்

June 13, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures