மேல், வடமேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் இன்று (செவ்வாய்க்கிழமை) அதி வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
எனவே, குறித்த பகுதிகளில் வாழும் மக்கள், சுகாதார பிரிவின் அறிவுறுத்தலுக்கு அமைய போதியளவான நீரை பருக வேண்டும் என அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
வயோதிபர்கள் மற்றும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களும் வெப்பநிலையினால் ஏற்படும் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் இந்த சந்தர்ப்பங்களில் தளர்வான ஆடைகளை அணியுமாறும் கோரப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை ஏப்ரல் மாத இறுதி வரை தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வறட்சியான காலநிலையால் 2 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.












