Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அடுத்த மே தினத்திற்குள் அரசியல் தீர்வு விடயத்திலே முன்னேற்றம் காண வேண்டும் | சாணக்கியன்

May 2, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

பல குழப்பங்கள் வரும், பல பிரச்சனைகள் வரும். இந்த காலப்பகுதியிலே எங்களுக்கான ஒரு வாய்ப்பு கிடைக்கலாம். அடுத்த மேதினத்திற்கு இடையிலே நாங்கள் வடக்கு கிழக்கு மாகாணத்திலே தமிழ் மக்கள் இதை விட இன்னும் ஒரு படி மேலே எங்களுடைய பிரதேசத்திலே எங்களுடைய அரசியல் தீர்வு விடயத்திலே முன்னேற்றம் காண வேண்டும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

நேற்று மாலை மட்டக்களப்பு பட்டிப்பளையில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் மேதின கூட்டத்தில் உரையாற்றும்போதே இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நமது மாவட்டத்திலிருக்கும் உண்மையான கட்சி உறுப்பினர்களை வைத்து, உண்மையான கட்சி பற்றாளர்களை அழைத்து, உண்மையான தமிழ் தேசிய தமிழரசு கட்சியினுடைய ஆதரவாளர்களை அழைத்துத்தான் நாங்கள் இந்த மேதின நிகழ்வுகளை நாங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றோம்.

எங்களுடைய மாவட்டத்திலே பல இடங்களிலே பம்பு செட் கொடுத்தவர்களை அழைத்து மேதின நிகழ்வு நடத்துகிறார்கள். வீடு திட்டம் தருவோம் என்று சொல்லி மேதின நிகழ்வு நடத்துகிறார்கள். மலசலக் கூடம் கட்டித் தருவோம் என்று சொல்லி மேதின நிகழ்வு நடத்துகிறார்கள்.

ஆனால் நாங்கள், எங்களுடைய உண்மையான தமிழரசு கட்சி ஆதரவாளர்களை, தமிழரசு கட்சியை ஆதரிக்கின்றவர்களை மாத்திரம் தான் நாங்கள் அழைத்து இந்த மேதின நிகழ்வை நாங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றோம்.

ஒரு இடதுசாரி கட்சியான தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்த பொழுது தமிழ் மக்கள் மட்டுமல்ல இலங்கையில் இருக்கும் அனைத்து மக்களும் எதிர்பார்த்தது, இடதுசாரி கட்சி என்று சொன்னால் மக்களுக்கு சார்பான தீர்மானங்களை எடுப்பார்கள், மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வார்கள், மக்களைப் பாதுகாப்பார்கள் என்று சொல்லி எதிர்பார்த்தார்கள்.

ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வந்து ஒன்றரை வருடத்திற்குள்ளே அவருடைய அமைச்சர்கள் கோடிக்கணக்கான பெறுமதியான வீடுகளைக் கட்டிவிட்டார்கள் என்ற செய்தி வருகின்றது. அவர்களுடைய அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட நிலக்கரியிலே ஊழல் நடக்கின்றது என்று வருகின்றது செய்திகள்.

அதேபோலத்தான் மிக அண்மையிலே 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் காணாமல் போய்விட்டது என்ற செய்தி வருகின்றது. இவ்வாறான ஒரு பின்னணியிலே இந்த அரசாங்கம் தங்களுடைய ஊழலை, தங்களுடைய செயல்திறன் அற்ற செயற்பாடுகளை மறைப்பதற்கு, தங்களுடைய செயல்திறனை மறைப்பதற்காக பல நடவடிக்கைகளை எடுத்தாலுங்கூட, அவர்களுடைய நடவடிக்கையால் எங்களுடைய மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

எங்களுடைய மக்கள், மக்கள் மீது வரிச் சுமை அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. மக்கள் மீது மின் கட்டணத்துடைய விலை அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. மக்கள் மீது எரிபொருளுடைய விலை அதிகரிக்குது, அந்த சுமையை மக்கள் மீது சுமத்தியிருக்கிறார்கள்.

ஆனால் ஊழியருடைய சம்பளம் பணவீக்கத்துக்கு குறைவாக இன்னும் அதிகரிப்பு இல்லை. அந்த வகையிலே எங்களுடைய மாவட்டத்திலே எங்களுடைய ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசியிருந்தார்கள், பேச்சாளர்கள் பேசியிருந்தார்கள், மீனவர்கள், விவசாயிகள், கால்நடைப் பண்ணையாளர்கள் அனைத்தும் அனைவரும் பாதிக்கப்பட்டார்கள்.

ஆனால் இந்தப் பிரச்சனைகளுக்கு ஒரு நாளும் மத்திய அரசாங்கத்தால் மாத்திரம் தீர்வு வழங்க முடியாது. ஒரு வடக்கு கிழக்கு இணைந்த மாகாணத்திலே சமஷ்டி அடிப்படையில் ஒரு தீர்வின் ஊடாக தமிழ் மக்களாகிய நாங்கள் எங்களை ஆளக்கூடிய வகையான ஒரு தீர்வின் ஊடாகத்தான் நாங்கள் எங்கள் பிரதேசத்திலே எங்களுடைய மக்களை நாங்கள் பாதுகாக்கலாம்.

அந்த வகையிலே எதிர்வரும் காலத்திலே நாங்கள் பொறுத்திருந்து பார்ப்போம். அடுத்த ஆண்டிற்குள்ளே பல பல விடயங்கள் நடைபெற இருக்கின்றது. இந்த அரசாங்கத்துக்குள்ளே பல குழப்பங்கள் நடைபெற இருக்கின்றது. சிங்கள செய்தியிலே பார்த்திருந்தேன், ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலே குழப்பம், ஜனாதிபதிக்கும் ஜே.வி.பிக்கும் இடையிலே குழப்பம், என்.பி.பி-க்கும் ஜே.வி.பி-க்கும் இடையிலே குழப்பம்.

பல குழப்பங்கள் வரும், பல பிரச்சனைகள் வரும். இந்த காலப்பகுதியிலே எங்களுக்கான ஒரு வாய்ப்பு கிடைக்கலாம். அடுத்த மேதினத்திற்கு இடையிலே நாங்கள் வடக்கு கிழக்கு மாகாணத்திலே தமிழ் மக்கள் இதை விட இன்னும் ஒரு படி மேலே எங்களுடைய பிரதேசத்திலே எங்களுடைய அரசியல் தீர்வு விடயத்திலே முன்னேற்றம் காண வேண்டும்.

Previous Post

திருக்கோணேஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான காணிகளை ஆலயத்திற்கு வழங்குமாறு கோரி வழக்கு…!

Next Post

எதிர்வரும் நாட்களில் நாடு முழுவதும் கனமழை மற்றும் இடி மின்னல் எச்சரிக்கை: வானிலை ஆய்வாளர் பிரதீபராஜா தகவல்

Next Post
கடும் மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

எதிர்வரும் நாட்களில் நாடு முழுவதும் கனமழை மற்றும் இடி மின்னல் எச்சரிக்கை: வானிலை ஆய்வாளர் பிரதீபராஜா தகவல்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சோமரத்ன ராஜபக்‌சவிடம் பன்னாட்டு விசாரணை! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

சோமரத்ன ராஜபக்‌சவிடம் பன்னாட்டு விசாரணை! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

June 24, 2026
பிளாக்மெயில் – திரைப்பட விமர்சனம்

நடிகர் ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘இம்மாற்றல்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

June 24, 2026
அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

June 23, 2026
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

அரச பாடசாலைகளில் முதலாம் தர மாணவர் சேர்க்கைக்கான புதிய சுற்றுநிருபத்துக்கு அமைச்சரவை அனுமதி

June 23, 2026

Recent News

சோமரத்ன ராஜபக்‌சவிடம் பன்னாட்டு விசாரணை! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

சோமரத்ன ராஜபக்‌சவிடம் பன்னாட்டு விசாரணை! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

June 24, 2026
பிளாக்மெயில் – திரைப்பட விமர்சனம்

நடிகர் ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘இம்மாற்றல்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

June 24, 2026
அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

June 23, 2026
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

அரச பாடசாலைகளில் முதலாம் தர மாணவர் சேர்க்கைக்கான புதிய சுற்றுநிருபத்துக்கு அமைச்சரவை அனுமதி

June 23, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures