வெளியானது! முதல்வர் குறித்த ஆளுநரின் அதிகாரப்பூர்வ அறிக்கை!
தமிழக முதல்வர் ஜெயலலிதா சில தினங்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் முதல்வர் உடல் நிலை குறித்து பல வதந்திகள் பரவி வந்தன.
இந்நிலையில், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரிக்க அப்போலோ மருத்துவமனை சென்றார்.
ஆளுநர் வருகையையொட்டி தலைமை செயலர், அமைச்சர்கள் என முக்கிய பிரமுகர்கள் பலர் அப்பல்லோ விரைந்தனர். கிரீம்ஸ் ரோடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
முதல்வரை சந்தித்து பத்திரிக்கையாளர்களை சந்திக்காமல் சென்ற ஆளுநரின் அறிக்கை தற்போது வெளியாகி இருக்கிறது.
அதில் ‘முதலமைச்சரின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தேன். அவர் நலமுடன் உள்ளார். முதல்வரின் உடல்நிலை தேறி வருவதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். அவர் சிகிச்சை பெறும் வார்டுக்கே சென்றேன்’ என கூறியுள்ளார்.