வித்தியாசமான லாட்டரி வெற்றியாளர் குடும்பம்!
கனடா- லாட்டரியில் 37.5மில்லியன் டொலர்கள் வெற்றியால் தாங்கள் எதையும் மாற்ற போவதில்லை என வெற்றி பெற்ற குடும்பம் ஒன்று தெரிவித்துள்ளது
37.5மில்லியன் டொலர்கள் லாட்டரி வெற்றி தந்தது என்ன?.
சமீபத்திய கனடாவின் மல்ரிமில்லியனர்களிற்கு ஒரு புதிய கணனியும் ஒரு சோடி சப்பாத்தும் போதும் என தெரிவித்துள்ளனர்.பற்றிக் லமொத்தி அவரது மனைவி ஜூவான் லெப்லொன்ட் இவரது தந்தை கே லெப்லொன்ட் தம்பதியினரின் மகன் யனிக லமொத்தி-லெப்லொன்ட் பரிசை பகிர்ந்து கொள்வர்.
சப்பாத்து ஜூவானிற்கு. கணனி அவரது மகனிற்கு.அதிஷ்டம் அடித்திருக்கின்ற போதிலும் தாங்கள் தங்கள் வாழ்க்கையை மாற்றப்போவதில்லை என தெரிவித்தனர். கணவனும் மனைவியும் ஜக்பொட் அடித்திராவிடில் இந்த வாரமும் தங்கள் வேலையை தொடர்ந்து செய்திருப்போம் என கூறினர்.