விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் சமூகத்துடன் இணைவு
புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் ஐவர் இன்று சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் இன்று நடைபெற்ற வைபவமொன்றின் போது இவர்கள் ஐவரும் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்வில் புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக உள்ளிட்ட இராணுவ அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
தற்போதைய நிலையில் பூந்தோட்டம் இராணுவ முகாமில் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் பத்தொன்பது பேர் தொடர்ந்தும் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இன்று விடுதலை செய்யப்பட்ட புலிகளின் முன்னாள் உறுப்பினர்களில் சொந்த வீடுகள் இல்லாதவர்களுக்கான சொந்த வீடொன்றை அமைத்துக் கொடுப்பதற்கான திட்டமொன்றும் முன்னெடுக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக தெரிவித்துள்ளார்.