வால்மார்ட்டில் நடக்கும் “இதயத்தை பிளக்கும்” சம்பவம்!
கனடா-வன்கூவர் பகுதியில் பல கிளைகளில் பணியாற்றிய முன்னாள் வால்மார்ட் பணியாளர் ஒருவர் பெரிய விற்பனை நிறுவனத்தின் உணவு கழிவுகள் குறித்த “மிகவும் குழப்பமான” தகவலை வெளியிட்டுள்ளார்.
Daniel Schoeler கிட்டத்தட்ட ஒவ்வொரு கடைகளிலும் ஒவ்வொரு முறை மாற்றத்தின் போதும் குறையற்ற உணவுப்பொருட்கள் சுமை சுமையாக குப்பையில் கொட்டப்படுகின்றன என தெரிவித்துள்ளார். இருப்பினும் உண்ணத்தகாத உணவுப்பொருட்களை மட்டுமே குப்பையில் கொட்டுவதாக வால்மார்ட் தெரிவிக்கின்றது.
தினமும் வேலை முடிந்து வீடு செல்லும் போது ஏராளமான உணவுப்பொருட்கள் குப்பையில் கொட்டப்படுவதை காணும் போது இதயத்தை பிளக்கின்றதென Schoele, Go Public.இடம் தெரிவித்தார்.
மாஜரின் பெட்டிகள், தயிர் மற்றும் புளி கிரீம், அப்பிள் நிறைந்த மற்றும் கிழங்கு பைகள், தர்பூசணிகள், கொட்டேஜ் சீஸ், காலாவதி திகதிகள் முடிவடையாத தகரங்களிலடைக்கப்பட்ட உணவு பொருட்கள், சீஸ், பட்டர் என்பன இவற்றுள் அடங்கும்.
சிபிசி சந்தை பகுதி ஓரு தேசிய விசாரனையை தொடங்கியது.அதிலிருந்து நாடு பூராகவும் உள்ள வால்மார்ட்டுகளில் பெரிய அளவிலான உணவு பொருட்கள் விரயப்படுத்தப் படுவதாக தெரியவந்துள்ளது. ரொறொன்ரோ பகுதிகளில் திரும்ப திரும்ப வெளியில் வைக்கப்பட்டிருக்கும் குப்பை தொட்டிகள் பேக் செய்யப்பட்ட உணவுகள் உறைந்த உணவுகள் இறைச்சி மற்றும் பால் பொருட்கள் போன்றன வற்றால் நிரம்பி வழிதல் தெரியவந்துள்ளது.
சந்தை பகுதியின் முழு விசாரனையும் அக்டோபர் 28 வெள்ளிக்கிழமை ஒளிபரப்படும்.
குறைந்த வருமான மக்கள் வால்மார்ட்டில் பொருட்களை வாங்குகின்றனர். ஆயினும் வால்மார்ட் இவற்றை பின் வழியாக கொட்டுகின்றது.
Go Public வால்மார்ட்டை தொடர்பு கொண்டு கருத்து கேட்ட போது மறுப்பு தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமான மார்க்கெட்பிளேசின் முழுப்பதிப்பையும் அக்டோபர் 28 வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு பார்க்கலாம்.