வரலாற்றில் ஒரு திருப்பம்: கனடிய சட்டங்காக்கும் தமிழ் வல்லுனர்கள் அமைப்பு உதயமானது!
கனடிய முப்படைகள், மற்றும் மத்திய பொலிஸ், மாகாணப் பொலிஸ், பிராந்தியப் பொலிஸ் பிரிவுகளைச் சார்ந்தோரும், கனடிய எல்லைப் பாதுகாப்புப்படை, கனேடிய குற்றவியலாளர்கள் சீர்திருத்தத் திணைக்களம் ஆகியவற்றை சேர்ந்த தமிழ் உத்தியோகத்தர்கள் தங்களிற்கான சங்கமொன்றியை அமைத்தனர்.
கனடிய சட்டங்காக்கும் தமிழ் வல்லுனர்கள் வலைப்பின்னல் Tamil Law Enforcement Network என அழைக்கப்படும் இந்த அமைப்பு தமிழ் இளைஞர்கள் யுவதிகள் எவ்வாறு சட்டங்காக்கும் அரச திணைக்களங்களில் இணைந்து பணியாற்றலாம் என்பதைக் கற்பித்தலோடு,
கனடியத் தமிழ் சமுதாயத்திற்கான வழிகாட்டல்கள் தேவைப்படும் போது விழிப்புனர்வுடன் துறைசார்ந்த அறிவுறுத்தல்களை வழங்குவதற்கும், ஊடககங்களினூடாக அறிவூட்டலை மேற்கொள்ளுதல் என்பதையும் மேற்கொள்ளும்
80க்கு மேற்பட்ட கனடிய சட்டங்காக்கும் வல்லுனர்கள் பதிவு செய்துள்ள இந்த அமைப்பின் அங்குரார்ப்பணக் கூட்டத்தில் 45க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். கடமைகளிலிருந்தோர் கலந்து கொள்வது சாத்தியமில்லாத காரணத்தினால் அவர்கள் தங்களது ஆதரவைத் தெரிவித்திருந்தனர்.
கனடிய மனிதவுரிமை மையச் செயற்பாட்டின் ஆதரவுடன் எமது சமுதாயத்தின் எதிர்கால நலன்கருதி சமூக ஆர்வலர் சுரேஸ் தர்மா அவர்கள் இந்த அமைப்புத் தொடங்குவதற்கான ஆரம்பக்கால ஏற்பாடுகளை ஏற்படுத்தி செயலாற்ற, முதலாவது இராப்போசன ஒன்றுகூடலிற்கான ஏற்பாட்டை தொழிலதிபர் ஸ்ரான் முத்துலிங்கம் வழங்கியிருந்தார் ஹால்ரன் பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் நிசாந் துரையப்பா மற்றும் ரொறன்ரோ பொலிஸ் அதிகாரிகளான சுரேந்திரன் சிவதாசன் மற்றும் கஜன் கதிரவேலு, அஜந்தன மயில்வாகனம் ஆகியோர் முன்னிற்று உழைத்திருந்தனர்.
ஈழத்தமிழர்கள், தமிழ்நாட்டுத் தமிழர்கள், தென்னாபிரிக்கத் தமிழரொருவர், மலேசியத் தமிழரொருவர் மற்றும் மொரிசியஸ் தமிழர் ஒருவர் என சகலரையும் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த அமைப்புக் கனடியத் தமிழர்களின் வரலாற்றில் முக்கியமானதொரு பங்கை வகிக்கும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
–