லிபரல் அரசின் சிரிய அகதிகள் திட்டத்திற்கு இதுவரை 136 மில்லியன் டொலர் செலவு

லிபரல் அரசின் சிரிய அகதிகள் திட்டத்திற்கு இதுவரை 136 மில்லியன் டொலர் செலவு

சிரிய அகதிகள் 25 ஆயிரம் பேரை கனடாவில் குடியமர்த்தும் லிபரல் அரசின் முன்னணி திட்டத்தின் முதல் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் சுமார் 136 மில்லியன் டொலர் செலவிடப்பட்டதாக கனேடிய அரசு அறிவித்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25 ஆயிரம் சிரிய அகதிகளை கனடாவில் குடியமர்த்தும் செயற்திட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வரை குடிவரவு திணைக்களம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின் பிரகாரம் குறித்த செலவுகளில் சிரிய அகதிகளின் போக்குவரத்து மற்றும் அவர்களை வரவேற்பதற்குமே அதிகளவில் செலவிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து செலவுகள் எதிர்பார்த்த அளவிலும் குறைவாக காணப்பட்டமை மற்றும் இராணுவ வீட்டு வசதிகள் ஒருபோதும் பயன்படுத்தப்படாமை போன்ற காரணங்களால் குறிப்பிட்டளவு சேமிக்கப்பட்டுள்ளதாகவும் கனேடிய குடிவரவு அமைச்சர் ஜோன் மக்கலம் தெரிவித்துள்ளார்.

குறித்த செயற்திட்டம் அகதிகள் அடையாளம், செயலாக்கம், போக்குவரத்து உள்ளிட்ட ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வரவு செலவுத்திட்டத்தில் ஆறு ஆண்டுகளுக்கு 678 மில்லியன் டொலராக கணக்கிடப்பட்டது.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள மூன்று பிரிவுகளுக்கு அதிகூடுதலாக 188 மில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டது. எனினும் இம்மூன்று செயன்முறைகளுக்கும் 108.5 மில்லியன் டொலர்களே இதுவரை செலவிடப்பட்டுள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அகதிகள் குடியேற்ற வரவு செலவு திட்டத்தின் பெரும் பகுதி அகதிகள் குடியேற்றம், வருமான ஆதரவு, மொழி பயிற்சி, மற்றும் வேலை சேவைகளுக்கு செலவிடவேண்டியுள்ளதாகவும் இவற்றிற்காக இதுவரை 32.6 மில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அகதிகள் குடியேற்ற திட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

OHN-MCCALLUM

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News