ராணுவ வீரர்களுடன் நடுவானில் மாயமான விமானம்: தேடுதல் பணியில் 100 மீட்புக்குழுவினர்
ரஷ்யா நாட்டில் 10 ராணுவ வீரர்களுடன் பயணமான விமானம் ஒன்று நடுவானில் மாயமாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சைபீரியாவில் உள்ள Krasnoyarsk என்ற காட்டுத் தீ பரவி வருகிறது.
தீயை கட்டுப்படுத்த Russian IL-76 என்ற மீட்பு விமானத்தில் 10 ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டனர்.
காட்டுப்பகுதிக்கு சென்ற அந்த விமானம் தீயை கட்டுப்படுத்தும் ஈடுப்பட்டபோது, திடீரென காணாமல் போயுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை தொடர்ந்து பாராசூட்கள் உதவியுடன் சுமார் 100 மீட்புகுழுவை சேர்ந்த வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுப்பட்டு வருவதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.